மொத்தம் 18 மணி நேரம்! இதுதான் உலகின் மிக நீண்ட விமான பயணம்! வாய்ப்பு இருந்தா போயிட்டு வாங்க
சிங்கப்பூர்: விமான பயணம் என்பதே சீக்கிரமாக போய் சேர்வதற்குதான். ஆனால், இந்த விமான பயணத்திலும் மிக நீண்ட பயணங்கள் இருக்கவே செய்கின்றன. அப்படியான பயணங்கள் சலிப்பூட்டும் வகையில் இருக்கும்.
ஒரு காலத்தில் பக்கத்து ஊரில் திருவிழா நடக்கிறது எனில், வண்டி கட்டி போய் பார்த்து வருவோம். முந்தைய நாள் இரவு புறப்பட்டால்தான் அடுத்த நாள் காலை அங்கு போய் சேர முடியும். இப்படி இருந்த காலத்தில் பேருந்துகள், பயண நேரத்தை வெகுவாக குறைத்தன. அரை மணி நேரம், ஒரு மணி நேரத்திற்கெல்லாம் பக்கத்து ஊருக்கு போய்விட முடியும்.

அதன் பின்னர் சைக்கிள், கார்கள், பைக்குகள் என போக்குவரத்தை எளிதாக ஏராளமான வாகனங்கள் வந்துவிட்டன. குறிப்பாக ரயில் போக்குவரத்து பொதுமக்களுக்கு மிகவும் எளிதாக போய்விட்டது. இதையெல்லம் தூக்கி சாப்பிடும் வகையில் வந்ததுதான் விமான போக்குவரத்து. கடல் தாண்டி செல்பவர்கள் கப்பலில் பயணித்து நாட்களை வேஸ்ட் செய்யாமல் இருக்க, விமான போக்குவரத்து உதவியது.
பக்கத்து நாடுகளுக்கே 1-2 மணி நேரத்தில் போய்விட முடிகிறது. ஆனால், இப்படியான விமான போக்குவரத்தில் கூட சலிப்பு இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் மக்களே! இந்த சலிப்புக்கு காரணம் விமான பயண நேரம்தான். என்னதான் விமானம் வேகமாக பறக்கும் என்றாலும், நீண்ட தூரம் போகும் விமானங்களில் பயணித்தால் நடு முதுகு நகர்ந்துவிடும்.
சிங்கப்பூரிலிருந்து நியூயார்க்கின் ஜான் எப் கென்னடி விமான நிலையத்திற்கு செல்லும் விமானம்தான் உலகின் மிக நீண்ட விமான பயணமாகும். மொத்தம் 18 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். இதற்காக சிறப்பு விமானத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இயக்குகிறது.
ஏர்பஸ் A350-900 ULR விமானம்தான் இந்த நீண்ட தூர பயணத்தை மேற்கொள்கிறது. நீண்ட தூர பயணத்திற்கும், எரிபொருள் சிக்கனத்திற்கும் ஏற்றார் போல இந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த விமானத்தில் எகனாமிக் கிளாஸ் கிடையாது. நீண்ட தூர பயணம் என்பதால், பயணிகளின் சவுகரியத்தை கருத்தில் கொண்டு 67 பிசினஸ் கிளாஸ் இருக்கைகள் மற்றும் 94 பிரீமியம் எகானமி கிளாஸ் இருக்கைள் இருக்கின்றன.
காற்றின் வேகத்தை பொறுத்து விமானங்கள் இரண்டு வழிகளில் பயணிக்கும். ஒன்று, சிங்கப்பூரிலிருந்து பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் அலாஸ்கா வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும். இரண்டாவது வழி ஐரோப்பா மற்றும் அட்லாண்டிக்கை கடந்து செல்வது. இந்த விமானத்தில் நீங்கள் பயணிக்கும்போது 12 நேர மண்டலங்களை கடப்பீர்கள். எனவே கடுமையான குழப்பங்கள் நேரிடலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications