"எங்க நாட்டில் கால் வைக்க கூடாது.." Nvidia ஜென்சன் உடன் கள்ள உறவு! ஆலிஸுக்கு தடை விதித்த சிங்கப்பூர்
சிங்கப்பூர்: என்விடியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜென்சன் கள்ள உறவில் இருந்த ஆலிஸ் ஹுவாங் தனது நாட்டிற்குள் நுழைய சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. ஆலிஸ் முதலில் சிங்கப்பூரை சேர்ந்த மெகாஸ்பீட் என்ற கிளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனத்தின் வர்த்தக பிரிவில் வேலை செய்திருந்தார். ஜென்சன் விவகாரத்தில் ஆலிஸ் பெயர் சர்வதேச அளவில் சர்ச்சையான நிலையில், சிங்கப்பூர் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே உலகின் மிக பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா மற்றும் அதன் சிஇஓவாக இருந்த ஜென்சன் குறித்தே பேச்சாக இருக்கிறது. அவர் சீனா உளவாளி என சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண் தொழிலதிபர் உடன் கள்ள உறவில் இருந்தார் என்பதே பிரச்சினையின் மையக்கரு.

தடை விதித்த சிங்கப்பூர்
இது தொடர்பாக ஒவ்வொரு மணி நேரமும் எதிர்பார்க்காத திருப்பங்கள் அரங்கேறி வரும் சூழலில், ஆலிஸ் ஹுவாங் தனது நாட்டிற்குள் நுழைய சிங்கப்பூர் அரசு தடை விதித்துள்ளது. முதலில் சிங்கப்பூரை சேர்ந்த மெகாஸ்பீட் என்ற நிறுவனத்தில் தான் வேலை பார்த்தார். அந்த நிறுவனம் தொடர்பாக நடந்த விசாரணையை தொடர்ந்தே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த விவகாரத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை சிங்கப்பூர் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது ஆலிஸ் ஹுவாங் சீன உளவாளியா என்பது குறித்து சிங்கப்பூர் விசாரிக்கவில்லை. மாறாக மெகாஸ்பீட் நிறுவனத்தின் சர்வர்கள் வாங்குதல் மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளில் சிங்கப்பூர் சட்டங்களை மெக்பீஸ்ட் நிறுவனம் பின்பற்றவில்லை என்பதே பிரதான புகார். அது தொடர்பாகவே விசாரணை நடந்துள்ளது.
என்ன புகார்
மெகாஸ்பீட் நிறுவனம் வாங்கிய சர்வர்கள் சிங்கப்பூர் சந்தைக்குள் கொண்டு வரப்படாமலேயே, அங்கிருந்து மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனவா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை தொடங்கியது. 2025 அக்டோபரில் சிங்கப்பூர் போலீசார் இந்த நிறுவனத்தின் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய தொடங்கினர். அந்த விசாரணை இன்னும் தொடர்ந்து வருகிறது.
என்ன நடந்தது!
கடந்த பிப்ரவரி மாதம் ஆலிஸ் ஹுவாங் சிங்கப்பூர் நாட்டை விட்டு வெளியேறினார். இந்த சூழலில் தான் தான் அவரை மீண்டும் சிங்கப்பூருக்குள் அனுமதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதாக சிங்கப்பூர் உள்துறை தெரிவித்துள்ளது. அவர் குற்றம் செய்தார் என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், போலீசாரிடம் வேண்டும் என்றே தவறான தகவல்களை அளித்ததாகவும், மெகாஸ்பீட் நிறுவனத்தில் தனக்கு இருந்த அதிகாரத்தை குறைத்துக் காட்டியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜினாமா
இது ஒரு பக்கம் இருக்க என்விடியாவில் பெரிய பூகம்பமே வெடித்துள்ளது. 33 ஆண்டுகளாக என்விடியா நிறுவனத்தை வழிநடத்திய ஜென்சன் சிஇஓ பதவியில் இருந்தும் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகினார். 63 வயதான அவர், ஆலிஸ் மட்டுமின்றி வேறு இரு பெண்கள் உடனும் திருமணத்தை தாண்டிய உறவில் இருந்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்தே பதவி விலக முடிவெடுத்தார். இது தொடர்பாக என்விடியா ஊழியர்களுக்கு எழுதிய கடிதத்தில், மனைவிக்கு உண்மையாக இருக்க தவறியதை ஒப்புக்கொண்ட அவர், நம்பிக்கையை மீறியதற்காக மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதையடுத்து என்விடியா நிறுவனத்தின் நிதி துறை தலைவரான கோலெட் கிரெஸ் இடைக்கால சிஇஓவாக நியமிக்கப்பட்டுள்ளார். 33 ஆண்டுகள் நிறுவனத்தை வழிநடத்திய ஜென்சனுக்கு பதிலாக யாரை சிஇஓவாக நியமிப்பது என்பது குறித்து நிர்வாக குழு ஆலோசித்து வருகிறது.


Click it and Unblock the Notifications
