6 மாதம் வேலை வாங்கிவிட்டு டிஸ்மிஸ் செய்த நிறுவனம்.. வழக்கு போட்டு ரூ.19 லட்சம் இழப்பீடு பெற்ற பெண்!
சிங்கப்பூர்: தனியார் நிறுவனம் ஒன்றில் 6 மாதம் வேலை செய்த பெண் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டார். இருப்பினும், தன்னை காரணமே இல்லாமல் பணிநீக்கம் செய்ததாக அந்த பெண் வழக்கு போட்ட நிலையில், அதில் அந்த பெண்ணுக்கு சாதாகமாக தீர்ப்பு வந்துள்ளது. வேலைகளில் சில குறைபாடுகள் இருந்தாலும் முறையான காரணம் இல்லாமல் பணிநீக்கம் செய்யப்பட்டதாக சொல்லி சுமார் ரூ.19 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
இப்போது வேலைவாய்ப்பு மார்கெட் ரொம்பவே டைட்டாக இருக்கிறது. வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது. அப்படியே கிடைத்தாலும் அதை தக்கவைத்து கொள்ள மிக பெரியளவில் போராட வேண்டி இருக்கிறது. திடீர் திடீரென பணிநீக்கங்களும் நடக்கிறது. இதற்கிடையே சிங்கப்பூரில் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வழக்கு போட்டு இழப்பீடு பெற்றிருக்கிறார். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்!

பணிநீக்கம்
கடந்த 2025 ஏப்ரல் மாதம் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஆட்டிட் மேனேஜராக பெண் ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்தார். அவருக்கு ஆறு மாத பிரோபேஷன் காலம் வழங்கப்பட்டது. சரியாக அந்த பிரோபேஷன் காலம் முடிவடையும் நேரத்தில், அவரது பணியை நிரந்தரமாக்க முடியாது என்று சொல்லி அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்துவிட்டதாம். கேட்டதற்கு செயல்திறன் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதே சொன்னார்களாம்!
இதனை ஏற்க மறுத்த அந்த பெண், அங்குள்ள ஊழியர்கள் குறைதீர்ப்பு முகமையை அணுகினார். தனது பணியில் குறை இருப்பதாக தனக்கு எந்த எச்சரிக்கையும் வழங்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார். மேலும், தனக்கு ஒருபோதும் தெளிவாக விளக்கப்படாத ஒரு விஷயத்தை வைத்து தன்னை மதிப்பீடு செய்ததாகவும் பணி நீக்கத்திற்கும் முறையான காரணத்தை சொல்லவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
செயல்திறன்
மறுபுறம் செயல்திறன் போதியளவு இல்லாததாலேயே பணிநீக்கம் செய்ததாக அந்த நிறுவனம் வாதிட்டது. புரோபேஷனில் இருக்கும் ஊழியர்கள் குறைந்தபட்சம் 80 சதவீத ஸ்கோர் பெற வேண்டும் என்றும், 10 முக்கிய திறன்களில் சராசரியாக 5க்கு 3 என்ற ரேட்டிங் பெற வேண்டும் என்றும் நிறுவனம் கூறியது. ஆனால் அந்த பெண்ணுக்கு 71 சதவீத ஸ்காோர் மட்டுமே கிடைத்ததாகவும் அவரது சராசரி ரேட்டிங் 2.4ஆக இருந்ததாகவும் நிறுவனம் தெரிவித்தது.
தீர்ப்பு
இருப்பினும், ஊழியரின் மேனேஜர் பணியில் சேர்ந்தபோது இந்த ரேட்டிங் அல்லது ஸ்கோர் குறித்து உரிய முறையில் அந்த பெண்ணுக்கு விளக்கவில்லையாம். மேலும், நிறுவனத்தின் புரேபேஷன் கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்த முறையான பெர்பாமன்ஸ் ரிவ்யூ கூட முறையாக நடத்தப்படவில்லை என்று தீர்ப்பாயம் குறிப்பிட்டது. இப்படி எந்தவொரு விஷயமும் தெளிவாக நடத்தப்படாத நிலையில், எப்படி பெண்ணை வேலையில் இருந்து நீக்க முடியும் என தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. ஊழியரின் வேலையில் சில குறைபாடுகள் இருந்தாலும் கூட முன்கூட்டியே தெளிவாக விளக்கப்படாத செயல்திறன் அடிப்படையில் அவரை பணிநீக்கம் செய்தது நியாயமற்றது என்று தீர்ப்பாயம் கூறியது.
இழப்பீடு
தனக்கு கொரிய மொழி தெரியாததால் பாகுபாடு காட்டப்பட்டதாகவும், நிறுவனத்தின் ஆடிட் நடைமுறைகள் தொடர்பாக கேள்வி எழுப்பியதால் பழிவாங்கப்பட்டதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் இந்த இரு குற்றச்சாட்டுகளுக்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பாயம் தெரிவித்தது. அதேநேரத்தில், அவரை பணிநீக்கம் செய்தது தவறான முடிவு என்ற தீர்ப்பாயம், அந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. அந்த பெண்ணுக்கு அதிகபட்ச இழப்பீடாக S$30,000, அதாவது சுமார் ரூ.19 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பாயம் உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications
