சிங்கப்பூரில் திரையிடப்படும்.. சுதா கொங்கராவின் திரைப்படம்! கலாச்சார பாலமாக திகழும் சினிமா!
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய திரைப்பட விழா நடைபெற இருக்கிறது. இதனை சிங்கப்பூருக்கான இந்திய தூதர் டாக்டர் ஷில்பக் அம்புலே தொடங்கி வைத்துள்ளார். இது இரு நாடுகளுக்கு இடையேயான கலாச்சார உறவை பலப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. இந்த விழாவில், இயக்குநர் சுதா கொங்கராவின் திரைப்படமும் திரையிடப்பட உள்ளது.
நிகழ்ச்சியை தொடக்கி வைத்த டாக்டர் ஷில்பக் அம்புலே, இந்தியா, சிங்கப்பூர் இடையிலான மக்கள் உறவுகளை வலுப்படுத்தும் முக்கியத் தளமாக இவ்விழா திகழ்கிறது என கூறியுள்ளார். ஜனவரி 23 முதல் மார்ச் 8, வரை இத்திருவிழாவில் 21 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

"இந்தியத் திரைப்பட விழா, மக்கள் உறவுகளை வலுப்படுத்தும் முக்கிய நிகழ்வாகும். சிங்கப்பூர் அரசு, திரைப்பட சங்கம், கோல்டன் வில்லேஜ் சினிமா மற்றும் பங்காளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த ஆண்டு வெற்றியைத் தொடர்ந்து, இவ்வாண்டு விழா விரிவாக்கப்பட்ட திட்டமிடலுடன் இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை, படைப்பாற்றல், ஈர்ப்பைக் கொண்டாடுகிறது.
கடந்த ஆண்டின் அமோக வரவேற்பு, கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளின் மக்கள் உறவுக்கு இந்த விழா ஒரு அர்த்தமுள்ள தளம் என்பதை உறுதிப்படுத்தியது" என்று கூறியுள்ளார்.
சிங்கப்பூர் திரைப்பட சங்கத் தலைவர் கென்னத் டான், இது குறித்து கூறுகையில், "இந்தியத் திரைக் கலைஞர்களின் ஆக்கபூர்வமான திறனை வெளிப்படுத்தும் இந்தப் படத் தேர்வுகளுடன், சிங்கப்பூரின் திரைப்பட ஆர்வலர்கள் ஒன்றிணைந்து எழுச்சியடைவார்கள்" என்று கூறினார்.
இந்த விழாவில், எட்டு இந்திய மொழிகளில், பல்வேறு வகை, பிராந்தியம், தலைமுறைகளைச் சேர்ந்த 21 திரைப்படங்கள் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளன. பாலிவுட்டின் மூன்று நட்சத்திரங்களான ஷாருக் கான், அமீர் கான், சல்மான் கான் ஆகியோரின் திரைப்படங்கள் ஓர் சிறப்பம்சம் என சிங்கப்பூரில் கொண்டாடப்படுகிறது. இவர்களின் படைப்புகள் பல தசாப்தங்களாக இந்திய சினிமாவை வடிவமைத்து உலகளவில் பெரும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
"தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே", "3 இடியட்ஸ்", "தங்கல்", "பியார் கியா தோ டர்னா க்யா", "ராஜு பன் கயா ஜென்டில்மேன்" போன்ற புகழ்பெற்ற படங்களும், "உரி: தி சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்", "சாம் பகதூர்" போன்ற போர் நாடகங்களும், "பத்மாவத்", "கிராந்திவீர்", "மங்கல் பாண்டே: தி ரைசிங்" போன்ற வரலாற்று, சமூகப் படங்களும் திரையிடப்படுகின்றன.
தமிழ்ச் சினிமாவின் "ரோஜா", "சூரரைப் போற்று" போன்ற படங்கள் திரையிடப்படுகின்றன. "வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்" (அசாம்), "அனந்தா" (ஒடியா), "ஆட்டம்" (மலையாளம்), "ஹெல்லாரோ" (குஜராத்தி), "ஜிப்ஸி" (மராத்தி), "பூங்" (மணிபுரி) போன்ற பல்வேறு மாநிலப் படங்களும் சர்வதேச பார்வையாளர்களுக்கு இந்தியாவின் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் விதமாக திரையிடப்படுகின்றன.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications