போர்ச்சுகல் டூ சிங்கப்பூர்.. 1.2 லட்சத்தில் 13 நாடுகள் டூர், 18800 கிமீ, உலகிலேயே நீளமான ரயில் பயணம்
சிங்கப்பூர்: போர்ச்சுகல் மற்றும் சிங்கப்பூர் இடையே 21 நாட்களில் 13 நாடுகள், 11 நிறுத்தங்களுடன் உலகின் மிக நீளமான ரயில் பயணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 18 ஆயிரத்து 800 கிமீ பயணிக்கலாம். இந்த ரயிலில் பயணிக்க மொத்த செலவு 1.2லட்சம் ஆகும். 7 நாடுகளில் இதற்கு விசா பெற வேண்டும் . இந்த ரயில் பாதை உலக அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது. உலகத்தில் 13 நாடுகளை ஒரே ஒரு டூரில் பார்க்க முடியும்.. அத்தனை நாடுகளையும் பார்க்க வெறும் 1.20 லட்சம் என்பதால் அதில் பயணிக்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இது பற்றி சற்று பார்ப்போம்.
விமானத்தில் ஏறி சில மணி நேரங்களில் கண்டம் விட்டு கண்டம் தாவுவது இன்றைய காலக்கட்டத்தில் பெரிய விஷயமில்லை. ஆனால், ஜன்னல் ஓரம் அமர்ந்து, ஒரு நாட்டின் நிலப்பரப்பு மெல்ல மெல்ல மாறி, மற்றொரு நாட்டின் கலாச்சாரத்திற்குள் நுழைவதை ரசிப்பதில் இருக்கும் சுகமே தனி. அப்படி ஒரு "கனவுப் பயணத்தை" இப்போது நிஜமாக்கியிருக்கிறது ஒரு புதிய ரயில் பாதை.

ஐரோப்பாவின் முனையில் இருக்கும் போர்ச்சுகலில் தொடங்கி, ஆசியாவின் கடைக்கோடியில் இருக்கும் சிங்கப்பூர் வரை தரைவழியாகவே ஒரு பிரம்மாண்ட ரயில் பயணத்தை இப்போது மேற்கொள்ள முடியும். சுமார் 18,800 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்தப் பயணம், உலகிலேயே மிக நீளமான ரயில் பயணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜன்னலுக்கு வெளியே மாறும் உலகம்
இந்த 21 நாள் பயணத்தில் நீங்கள் ஒரு தேசத்தின் குடிமகனாகப் பயணிப்பதில்லை, மாறாக உலகக் குடிமகனாக மாறுகிறீர்கள். போர்ச்சுகலில் பயணத்தைத் தொடங்கும்போது நீங்கள் பார்க்கும் ஐரோப்பியக் கட்டிடக்கலை, சில நாட்களில் ரஷ்யாவின் பனி படர்ந்த சைபீரியக் காடுகளாக மாறும். பின்னர் மங்கோலியாவின் புல்வெளிகளைக் கடந்து, சீனாவின் பிரம்மாண்ட நகரங்களுக்குள் நுழைந்து, கடைசியாகத் தாய்லாந்து மற்றும் மலேசியாவின் அடர்ந்த வெப்பமண்டலக் காடுகள் வழியாகச் சிங்கப்பூரைச் சென்றடையும் போது, உங்கள் கண்கள் பார்த்த காட்சிகள் ஒரு வாழ்நாள் அனுபவமாக இருக்கும்.
இந்த பயணம் போர்ச்சுகலின் லாகோஸில் தொடங்குகிறது. அங்கிருந்து லிஸ்பன் வழியாக ஸ்பெயினின் மாட்ரிட் நகருக்கு இரயில் பயணிக்கிறது. அடுத்த சில மணி நேரங்களில் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரை அடையும். அதிவேக 'டிஜிவி' ரயில்கள் மூலம் ஜெர்மனி மற்றும் போலந்தைக் கடந்து பெலாரஸ் வழியாக ரஷ்யாவின் மாஸ்கோவைச் சென்றடைகிறது இந்த நீண்ட ரயில்.
இரண்டாம் கட்டம்: சைபீரியக் காடுகளும் சீனப் பெருஞ்சுவரும் (நாள் 5 - 12)
இந்த பயணத்தின் முதுகெலும்பாக இருப்பது புகழ்பெற்ற 'டிரான்ஸ்-சைபீரியன் எக்ஸ்பிரஸ்'. மாஸ்கோவில் இருந்து சீனா நோக்கித் திரும்பும் இந்த ரயில், அடுத்த 6 நாட்களுக்கு ரஷ்யாவின் பனி படர்ந்த மலைகளையும், மங்கோலியாவின் புல்வெளிகளையும் கடந்து பெய்ஜிங்கை அடைகிறது. உலகின் ஒரு மிகப்பெரிய நிலப்பரப்பை ரயிலிலேயே கடக்கும் பிரமிப்பு உங்களுக்கு கிடைக்கும்
மூன்றாம் கட்டம்: ஆசியாவின் புதிய இணைப்பு (நாள் 13 - 21)
சீனாவின் குன்மிங் நகரில் இருந்து லாவோஸ் நாட்டுக்குச் சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய ரயில் பாதைதான் இந்த 18,800 கிமீ பயணத்தைச் சாத்தியமாக்கியுள்ளது. லாவோஸிலிருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்குள் ரயில் நுழைகிறது. அங்கிருந்து மலேசியாவின் கோலாலம்பூர் வழியாகப் பயணித்து, சரியாக 21-வது நாளில் சிங்கப்பூரை அடைகிறது.
பட்ஜெட்டில் ஒரு உலகப் பயணம்!
பொதுவாக 13 நாடுகளைச் சுற்றி வர வேண்டுமென்றால் பல லட்சங்கள் செலவாகும். ஆனால், இந்தப் பிரம்மாண்ட ரயில் பயணத்தின் டிக்கெட் செலவு சுமார் 1.2 லட்சம் ரூபாய் (சுமார் 1,350 யூரோக்கள்) மட்டுமே என மதிப்பிடப்பட்டுள்ளது. விமானக் கட்டணங்களோடு ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு என்பதுதான் இதில் உள்ள சுவாரஸ்யமான விஷயம் ஆகும்.
இருப்பினும், இடையில் இறங்கித் தங்கும் ஹோட்டல் செலவுகள் மற்றும் உணவுச் செலவுகள் இதில் சேராது. ஆனாலும், ஒரு உலகச் சுற்றுப்பயணத்திற்கு இது மிகக் குறைந்த செலவாக பார்க்கப்படுகிறது
விசா 'செக் போஸ்ட்'
இந்தச் அருமையான நீண்ட பயணத்தில் இருக்கும் ஒரே சவால் விசா நடைமுறைகள்தான். மொத்தம் 13 நாடுகளைக் கடக்கும் இந்தப் பயணத்தில், சுமார் 7 நாடுகளுக்கு நீங்கள் முன்கூட்டியே விசா பெற வேண்டியிருக்கும். குறிப்பாக ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளின் விசா நடைமுறைகளைச் சரியாகத் திட்டமிட்டால், இந்தப் பயணம் அழகான வாழ்வில் மறக்க முடியாத இன்பப் பயணமாக அமையும்.
பலருக்கு விருப்பம்
சமீபத்தில் சீனா மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு இடையே அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதைதான் இந்த 18,800 கிமீ இணைப்பைச் சாத்தியமாக்கியுள்ளது. இதற்கு முன்பு வரை ரயிலிலேயே சிங்கப்பூர் செல்வதில் சில இடங்கள் விடுபட்டிருந்தன. இப்போது அந்தப் பாதை முழுமையடைந்துவிட்டதால், உலகப் பயண ஆர்வலர்கள் பலரும் இப்போது இந்தப் பாதையை நோக்கித் படையெடுக்கத் தொடங்கிவிட்டனர்.
அவசரம் அவசரமாக ஓடும் உலகில், "மெதுவாகப் பயணிப்பதில் இருக்கும் அழகை" இந்தப் பயணம் உணர்த்தும். கையில் ஒரு புத்தகம், காதுகளில் மெல்லிசை, ஜன்னலுக்கு வெளியே 13 நாடுகள்... இது வெறும் ரயில் பயணம் அல்ல; அது ஒரு வாழ்க்கைப் பயணம் ஆகும் .
-
ரயில்கள் மீது கல் வீசினால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை.. சென்னை ரயில்வே கோட்டம் கடும் எச்சரிக்கை! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications