பொருளாதாரத்தில் ‘கில்லி’.. சிங்கப்பூரின் 9வது அதிபரான தமிழர்.. யார் இந்த தர்மன் சண்முகரத்னம்?
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 9ஆவது அதிபராக தர்மன் சண்முகரத்னம் அதிகாரபூர்மாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். இவரைப் பற்றி பார்க்கலாம்..
சிங்கப்பூரில் தற்போது அதிபராகப் பணியாற்றி வரும் ஹலீமா யாக்கோப்பின் பதவி காலம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில், சிங்கப்பூரின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகள் கடந்த சில நாட்களாகவே முழுவீச்சில் நடைபெற்று வந்தது. இந்த அதிபர் தேர்தலில் மூன்று பேர் போட்டியிட்டனர்.

இன்று சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 27 லட்சம் மக்கள் வரை வாக்களித்தனர். பின்னர் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், தர்மன் சண்முகரத்னம் - 70.40% (1,746,427 வாக்குகள்) பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இங் கொக் சொங் - 15.72% (390,041 வாக்குகள்), டான் கின் லியான் - 13.88% (344,292 வாக்குகள்) பெற்று தோல்வியடைந்துள்ளனர்.
அதிபர் தேர்தல் வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்மன் சண்முகரத்னம், தமக்கும் தமது கொள்கைகளுக்கும் கிடைத்துள்ள வாக்குகள், சிங்கப்பூருக்குக் கிடைத்துள்ள "நம்பிக்கை வாக்குகள்" என்று நம்புவதாக கூறியுள்ளார். மேலும், சிங்கப்பூர் மக்கள் தம் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதைக் காப்பாற்றுவேன் என உறுதியளித்துள்ளார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் (வயது 66) மிகச்சிறந்த பொருளாதார வல்லுநர். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் படித்தவர். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை ஆய்வுப் பட்டம் முடித்தார். சீன-ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் வழக்கறிஞரான ஜேன் யுமிகோ இட்டோகியை திருமணம் செய்தார்.
கடந்த 2001-ல் சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து முதன்முதலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, 2006, 2011, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். நீண்டகாலமாக அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.
சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளார். 2011 முதல் 2014 வரை சர்வதேச நாணய மற்றும் நிதிக்குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். பிரதமரின் ஆலோசகர், நிதி அமைச்சர், கல்வி அமைச்சர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், துணை பிரதமர் எனப் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர், கடந்த ஜூலை மாதம், சிங்கப்பூர் அரசாங்கப் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் விலகினார். இந்த அதிபர் தேர்தலில் ஆளும் மக்கள் செயல் கட்சி இவருக்கு ஆதரவு அளித்தது. அன்னாசிப் பழம் சின்னத்தில் போட்டியிட்டு அதிபராக வெற்றி பெற்றுள்ளார் தர்மன் சண்முகரத்தினம்.

2025ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக தர்மன் சண்முகரத்னத்தை தேர்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், இதற்கு சிங்கப்பூரில் பெரும்பான்மையாக உள்ள சீனர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. தாம் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று வெளிப்படையாக அறிவித்தார் தர்மன். இந்நிலையில் பெரும் மக்கள் செல்வாக்குடன் அதிபர் ஆகியுள்ளார் தர்மன் சண்முகரத்னம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications