ஆண்களுக்கு மார்பகம்.. சீக்ரெட்டாக ஆபரேஷன் செய்து கொள்ளும் இளசுகள்! சிங்கப்பூரில் வினோத டிரெண்ட்

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை என்ற ஒரு சிகிச்சை இருப்பதே சமீப காலங்களாக தான் பலருக்கும் தெரியும். இந்த சிகிச்சை பெண்கள் தான் செய்வார்கள் என்றே பலரும் நினைத்திருப்பார்கள். ஆனால், சிங்கப்பூரில் ஒரு வினோத டிரெண்ட் உருவாகியிருக்கிறது. அதாவது அங்கு வாழும் ஆண்கள் இந்த மார்பக குறைப்பு அறுவை சிகிச்சையை செய்யும் டிரெண்ட் அதிகரித்துள்ளதாம். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.

உலகின் வளர்ந்த நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் இப்போது ஒரு வினோதமான டிரெண்ட் இருக்கிறது. அதாவது உலகெங்கும் பேஷன் உலகில் மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை என்பது பரவலாக அறியப்பட்ட ஒன்று! ஆனால் இது பெண்களுக்கு உரித்தானது என்றே பலரும் நினைத்திருப்போம். ஆனால், சிங்கப்பூரில் ஆண்களே இந்த சிகிச்சையை அதிகம் செய்கிறார்களாம்.

Singapore world offbeat

என்ன காரணம்!

இந்த திடீர் டிரெண்டிற்கு முக்கிய காரணமே கைனிகோமாஸ்டியா (Gynecomastia) என்ற ஒருவித உடல்நிலை பாதிப்பு தான். இது கேன்சர் பாதிப்பு இல்லை என்றாலும் ஆண்களிடையே இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறதாம். இந்த பாதிப்பு ஏற்படும் ஆண்களின் மார்பகம் வழக்கத்தை விட பெரிதாக வளர்ந்து, மார்பு பகுதி வீங்கியது போல இருக்குமாம். இதனால் உயிருக்கு ஆபத்தான சிக்கல் எதுவும் இல்லை என்றாலும் மனரீதியாக ஆண்கள் பாதிக்கப்படுவதுடன், தன்னம்பிக்கையையும் இழக்கின்றனர். இதன் காரணமாகவே சிங்கப்பூரில் மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்வது அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரை சேர்ந்த 27 வயதான மைக்கேல் இதற்கு ஒரு உதாரணம். டீன் ஏஜ் பருவத்திலேயே அவருக்கு இந்த பிரச்சினை ஏற்பட்டது. இதனால் அவர் தனது மார்பு பகுதியை மறைக்க எப்போதும் கருப்பு நிற ஹூடி அல்லது தளர்வான ஆடைகளை மட்டுமே அணிந்து வந்துள்ளார். உடலுடன் ஒட்டிய டைட்டான ஆடைகளை அணியவே தயங்கியுள்ளார்.

ஜிம் போனாலும் குறையாது

இது ஒரு வகையான பாதிப்பு என்பதால்.. எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அந்த வீக்கம் குறையாதாம். உடலின் மற்ற பகுதிகளில் எடை குறைத்தாலும் மார்பின் தோற்றம் மாறாதாம். அதுவும் உடற்பயிற்சியால் எடையை குறைக்க குறைக்க அது இன்னும் தெளிவாகத் தெரியுமாம். இதுபோன்ற சிக்கல் இருந்ததால் அவர் சமீபத்தில் தான் மார்பக குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த அறுவை சிகிச்சை தனது வாழ்க்கையை மொத்தமாக மாற்றிவிட்டதாக கூறும் மைகேல், "இப்போது என்ன ஆடை அணியலாம் என்று நான் யோசிக்க வேண்டியதில்லை. எப்படி நிற்கிறேன், எப்படி உட்கார்கிறேன் என்பதையும் கவலைப்படுவதில்லை. எனக்கு பிடித்த ஆடையை அணிய முடிகிறது. தன்னம்பிக்கையும் வந்துவிட்டது" என்கிறார்.

சிங்கப்பூர் மருத்துவர்

இது தொடர்பாகச் சிங்கப்பூர் மருத்துவர் ஐவன் புவா கூறுகையில், "இதுவரை நாங்கள் மட்டுமே கைனிகோமாஸ்டியாவால் பாதிக்கப்பட்ட பல நூறு ஆண்களுக்குச் சிகிச்சை அளித்துள்ளோம். பெரும்பாலும் டீன் ஏஜ் மாணவர்கள் முதல் நடுத்தர வயதுள்ள ஆண்கள் தான் எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள். பெரும்பாலும் எங்களிடம் சிகிச்சை வரும் ஆண்கள் தங்கள் மார்பகத்தை தளர்வான ஆடைகளையே அணிவார்கள். இது அவர்களின் தன்னம்பிக்கையைப் பாதிக்கிறது. ஜிம்மில் உடற்பயிற்சி செய்தாலும் இது குறையாது. ஏனென்றால் இது இது கொழுப்பு பிரச்சினை அல்ல.. மாறாகச் சுரப்பி திசு வளர்ச்சி தொடர்பானது" என்றார்.

உலகெங்கும் இந்த பாதிப்பு ஆண்களுக்கு இருக்கிறது என்றாலும் சிங்கப்பூரில் இதன் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. சிங்கப்பூர் மக்களில் 50 முதல் 60 சதவீத இளம் வயது ஆண்களுக்கு இந்த பிரச்சினை இருக்கிறது. டீன் ஏஜ் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. உடல் பருமன், கல்லீரல் மற்றும் சிறுநீரக நோய்கள், தைராய்டு கோளாறுகள் இந்த சிக்கலைத் தீவிரமாக்குகிறது.

அறுவை சிகிச்சை

பெரும்பாலும் இந்த பாதிப்பு யாருக்கும் வாழ்நாள் முழுக்க நீடிக்காது. பலருக்கும் தானாகவே சரியாகிவிடும்.. இருப்பினும், அதற்குப் பல ஆண்டுகள் கூட ஆகலாம். இப்படி நீண்ட காலம் ஆகும்போது அது ஆண்களின் மன நலனையும் தன்னம்பிக்கையும் பாதிக்கிறது. பள்ளி மற்றும் கல்லூரி வயதில் உருவக் கேலி உள்ளிட்டவை தன்னம்பிக்கையைக் கடுமையாகப் பாதிக்கின்றன. இதன் காரணமாகவே அங்கு ஆண்கள் அதிகம் இந்த மார்பக குறைப்பு அறுவை சிகிச்சையைச் செய்து கொள்கிறார்களாம்.!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+