‘ஜனநாயகன்’ படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய 3 விஜய் ரசிகர்களுக்கு ஏற்பட்ட சோகம்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் 'ஜனநாயகன்' திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய விஜய் ரசிகர்கள் 3 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒரே பைக்கில் பயணித்த பாண்டியராஜன் (32), வெங்கடேஷ் (27), சிபி சக்கரவர்த்தி (22) ஆகியோர் 4 வழிச்சாலையில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கார் மோதி மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கடந்த பொங்கலுக்கு ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, சென்சார் பிரச்சினை, இணையத்தில் முழுப் படமும் லீக், ஏ சான்றிதழ் என பல சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக உன்று திரையரங்குகளில் வெளியானது தமிழக முதல்வர் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்'. தமிழகம் முழுவதும் விஜய் ரசிகர்கள், தவெக கட்சியினர் உற்சாகமாக 'ஜனநாயகன்' படத்தை பார்த்து ரசித்தனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் 'ஜனநாயகன்' திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்பிய விஜய் ரசிகர்கள் 3 பேர் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒரே பைக்கில் பயணித்த பாண்டியராஜன் (32), வெங்கடேஷ் (27), சிபி சக்கரவர்த்தி (22) ஆகியோர், படம் பார்த்துவிட்டு 4 வழிச்சாலையில் திரும்பும்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த கார் மோதியுள்ளது.
இதில் அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவல் அறிந்து வந்த போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விஜய் ரசிகர்கள் 3 பேர், 'ஜனநாயகன்' படம் பார்த்துவிட்டு திரும்பி வந்தபோது விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
