கூலித்தொழிலாளியைக் காப்பாற்ற போராடிய பெண் நீதிபதி.. 108 வராததால் பரிதாப மரணம்!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: நீரில் மூழ்கியவருக்கு முதலுதவி கொடுத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் காரைக்குடி நடுவர் நீதிமன்ற நீதிபதி நர்மதா. ஆனால் ஆம்புலன்ஸ் வரத் தாமதானதால் அந்த தொழிலாளியின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி திலகர் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன். கூலித்தொழிலாளியான இவர் செக்காலை நாகாத்தம்மன் கோயில் குளத்தில் குளிக்கச் சென்ற போது, திடீரென நீரில் மூழ்கினார்.

A woman judge who fought to save the life of a submerged worker

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காரைக்குடி தீயணைப்பு துறை வீரர்கள் மாரியப்பனை உடனடியாக மீட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் அவருக்கு முதலுதவி செய்து 108 ஆம்புலன்ஸிக்கு தகவல் அளித்தனர்.

A woman judge who fought to save the life of a submerged worker

அப்போது அந்த வழியாக நீதிமன்றத்திற்கு சென்றுகொண்டிருந்த காரைக்குடி நடுவர் நீதிமன்ற நீதிபதி நர்மதா சம்பவ இடத்திற்கு வந்து, தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து மாரியப்பனுக்கு முதலுதவி செய்தார். 108 ஆம்புலன்ஸிக்கு தகவல் தெரிவித்தும், நீண்ட நேரமாகியும் வராததால், தீயணைப்புத்துறை வாகனத்திலேயே மாரியப்பனை ஏற்றி காரைக்குடி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

A woman judge who fought to save the life of a submerged worker

இதனையடுத்து தீயணைப்பு வாகனத்தை பின்தொடர்ந்தவாறே நீதிபதி நர்மதா அரசு மருத்துவமனைக்கு சென்றார். மாரியப்பனுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.

A woman judge who fought to save the life of a submerged worker

ஆனால் 108 ஆம்புலன்ஸ் உரிய நேரத்தில் வராததால் மாரியப்பனின் அவர் உயிர் பிரிந்தது. இதுகுறித்த காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

A woman judge who fought to save the life of a submerged worker
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+