அண்ணாமலைக்கு டெல்லி தந்த ரகசிய அசைன்மென்ட்.. காரைக்குடியில் கால் வைத்த பாஜக.. அப்ப திராவிட கட்சிகள்?
சிவகங்கை: தமிழக சட்டமன்ற தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை பாஜக மேலிடம் அறிவித்துள்ள நிலையில், காரைக்குடி தொகுதி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதிலும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, காரைக்குடி உள்ளிட்ட 6 முக்கிய தொகுதிகளுக்குச் சுற்றுப்பயணப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும், சந்தேகத்தையும் கிளப்பி விட்டுள்ளது..என்ன காரணம்?
காரைக்குடி தொகுதியை பாஜக விடுவதாக தெரியவில்லை.. அந்த தொகுதியின் மீது பாஜக கொண்டுள்ள அதீத ஆர்வத்தை கொண்டுள்ளது.. இது வரப்போகும் சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்க துவங்கிவிட்டது.. காரைக்குடியை பாஜக குறிவைப்பதற்கு பின்னால் வலுவான சில காரணங்கள் உள்ளதாகவும் தெரிகிறது..

முதலாவதாக, காரைக்குடியில் வணிக சமூகத்தினர் மற்றும் தொழில்முனைவோர் அதிக அளவில் வசிக்கிறார்கள்.. பொதுவாகவே வர்த்தக பிரிவினரிடையே தங்களுக்கு சாதகமான சூழல் இருப்பதாக கருதும் பாஜக, இங்குள்ள நடுத்தர வர்க்கத்தினரையும் இளைஞர்களையும் கவர முடியும் என நம்புகிறது.
பாஜக மேலிடம் குறி வைக்கும் காரைக்குடி
அடுத்ததாக, அழகப்பா பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்கள் நிறைந்த இந்த பகுதியில் உள்ளதால், வாக்காளர்களின் ஆதரவை திரட்டுவது எளிது என்பது அக்கட்சியின் கணக்காக உள்ளது.. மேலும், இந்து முன்னணி போன்ற அமைப்புகளின் தரைமட்ட பணிகளும், உள்ளூர் செல்வாக்குள்ள தலைவர்களின் சேர்க்கையும் பாஜகவுக்கு தன்னம்பிக்கையை அளித்துள்ளன.
அண்ணாமலையை பொறுத்தவரை, அவர் காரைக்குடியில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பல யூகங்கள் உலா வருகின்றன.
கட்சி மேலிடம் அவரை சுற்றுப்பயணப் பொறுப்பாளராக நியமித்திருப்பது, தேர்தலுக்கு முன்பாகவே அங்குள்ள கள யதார்த்தத்தை அவர் நேரடியாக கையாள வழிவகுத்துள்ளதாக தெரிகிறது..
அண்ணாமலை காரைக்குடி
கடந்த தேர்தல்களில் பாஜக கூட்டணி பெற்ற வாக்குகளும், தற்போதுள்ள அரசியல் மாற்றங்களும் அண்ணாமலை போன்ற ஒரு வலுவான பிம்பத்தைக் காரைக்குடியில் நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று பாஜகவின் சீனியர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, "சோஷியல் இன்ஜினீயரிங்" எனப்படும் சமூகக் கட்டமைப்பு ரீதியிலான வியூகங்களை வகுப்பதன் மூலம், காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளின் கோட்டையாக கருதப்படும் காரைக்குடியைத் தாமரை மலரும் இடமாக மாற்ற அவர்கள் திட்டமிடுகின்றனர்.
கட்சி மேலிடத்தின் உத்தரவு
அதுமட்டுமல்ல ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் என்பதால், கல்வி நகரமான காரைக்குடியில் உள்ள இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் மத்தியில் அண்ணாமலைக்கு ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது. அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் நிலவும் 'மாற்றம்' குறித்த எண்ணத்தை வாக்குகளாக மாற்ற அண்ணாமலை நினைப்பதாக தெரிகிறது..
வர்த்தக சமூகத்தின் ஆதரவு: காரைக்குடி ஒரு வணிக மையம். பிரதமர் மோடியின் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரிக்கும் வர்த்தக சமூகத்தினர் இங்கு அதிகம் என்பதால், அவர்களை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திப்பது அண்ணாமலைக்கு சாதகமாக அமையலாம்..
வெறும் தனிப்பட்ட விருப்பம் மட்டுமின்றி, "பாஜக வெல்ல வாய்ப்புள்ள தொகுதிகளை பலப்படுத்துங்கள்" என்ற டெல்லி தலைமையின் உத்தரவே அவரை இங்கு அதிக கவனம் செலுத்த வைத்துள்ளது. அண்ணாமலை போன்ற ஒரு நட்சத்திர வேட்பாளர் அங்கு நின்றால், அது தென் தமிழகம் முழுவதுமே கட்சிக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும் என்றும் பாஜக கணக்கு போடுகிறது..
சீமானின் வருகை?
இதனிடையே, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் காரைக்குடியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.. இது கண்டிப்பாக பாஜகவுக்கு ஒரு சவாலான சூழலையே தொகுதிக்குள் உருவாக்கும்..
ஏனென்றால், நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி கடந்த தேர்தல்களில் இங்கு சீராக உயர்ந்து வருவதால், சீமானின் ஆவேசமான பேச்சுகள் மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை அவர் பக்கம் ஈர்க்கவே வாய்ப்புள்ளதாக அரசியல் நிபுணர்கள் கணிக்கிறார்கள்..
யாருக்கு பிரியும் ஓட்டு வங்கி?
எனினும் சீமான் பிரிக்க போகும் ஓட்டு பெரும்பாலும் ஆளுங்கட்சி அல்லது பிரதான எதிர்க்கட்சிகளின் அதிருப்தி வாக்குகளாகவே இருக்கக்கூடும்.. பாஜகவின் சித்தாந்த ரீதியான உறுதியான வாக்குகளைச் சீமான் சிதைப்பது கடினம் என்றாலும், பொதுவான நடுநிலை வாக்குகளை சீமான் பிரிப்பது பாஜகவின் வெற்றி இலக்கை சற்று தடுமாற வைக்கலாம்..
அண்ணாமலையின் வருகை போட்டியை அதிகரித்தாலும், காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய கட்டமைப்பை தாண்டி பாஜக வெற்றி பெறுவது பெரிய சவாலாகவே இருக்கும்.
இதனால் பாஜக மற்றும் நாம் தமிழர் என வாக்குகள் தாறுமாறாக பிரிவது, இறுதியில் யாருக்கு காரைக்குடி சாதகமாக போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...!!
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
Assembly Election: அண்ணாமலை ரேடாரில் 4 தொகுதிகள்.. கோவையில் டிக் செய்ய போகும் தொகுதி எது -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications