மானாமதுரையில் ஒரு நொடி யோசிக்காததால் பறிபோன 3 உயிர்கள்! கார்- பைக் மோதலால் வந்த வினை!
சிவகங்கை: மானாமதுரை அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மதுரை-பரமக்குடி நான்கு வழிச் சாலையில், மானாமதுரையில் இருந்து மதுரை நோக்கி நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த அரவிந்த்குமார் என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார்.

அதே நேரத்தில், திருப்புவனம் வடகரை கிராமத்தைச் சேர்ந்த பாண்டியராஜன் (32), வெங்கடேஷ் (27), சிபி சக்கரவர்த்தி (22) ஆகிய மூன்று பேரும் மானாமதுரையில் இருந்து வடகரை கிராமம் நோக்கி ஒரே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

திருப்பாச்சேத்தி அருகே படமாத்தூர் விளக்கில் பகுதியில், இரண்டு வாகனங்களும் ஒன்றுக்கு ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த அரவிந்த்குமாரை கைது செய்த திருப்பாச்சேத்தி காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
