சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தூண்டில் போட்டு கொரோனாவை பிடித்த கூட்டம்".. ப்பா 3வது வேவ் வந்துடும் போலயே.. சிவகங்கையில் ஷாக்!

Google Oneindia Tamil News

சிவகங்கை: சிவகங்கையில் நடந்த முக்கியமான திருவிழா காரணமாக மீண்டும் கொரோனா கேஸ்களை அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Recommended Video

    India-வில் Coronavirus 3rd Wave அடுத்த மாதம் ஏற்படலாம்.. SBI வல்லுநர் குழு எச்சரிக்கை

    தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை ஓய்ந்துள்ள நிலையில் கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. தினசரி கொரோனா கேஸ்கள் 4000-க்கு கீழ் நேற்று முதல்முறையாக சென்றது.

    அந்த 6 மாநிலங்கள்.. டெல்டா பிளஸ்...கொரோனா 2-ம் அலை ஓயவில்லை என மத்திய அரசு சொல்வதன் பின்னணி! அந்த 6 மாநிலங்கள்.. டெல்டா பிளஸ்...கொரோனா 2-ம் அலை ஓயவில்லை என மத்திய அரசு சொல்வதன் பின்னணி!

    நேற்று செங்கல்பட்டு உள்ளிட்ட 15 மாவட்டங்களில் எங்கும் ஒரு கொரோனா மரணம் கூட பதிவாகவில்லை. தமிழ்நாடு இப்படி வேகமாக கொரோனாவில் இருந்து மீண்டு வரும் நிலையில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

    போக்குவரத்து

    போக்குவரத்து

    மாநிலம் முழுக்க பொது போக்குவரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. நகை, துணி கடைகள் 50% கூட்டத்தோடு இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்வது அதிகரித்துள்ளது. ஆனாலும் மக்கள் கூட்டமாக செல்ல கூடாது என்ற விதி உள்ளது.

    கூட்டம்

    கூட்டம்

    மக்கள் கூட்டமாக விழாக்களை நடத்த கூடாது, பொது கூட்டங்கள் நடத்த கூடாது என்று விதி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் சிவகங்கை மாவட்டத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக மீன் பிடி திருவிழாவில் கலந்து கொண்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் விளரிப்பட்டி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    மோசம்

    மோசம்

    மக்கள் பலர் கூட்டம் கூட்டமாக வந்து மிகப்பெரிய ஏரியில் மீன் பிடிக்கும் திருவிழாவில் கலந்து கொண்டனர். அருகே உள்ள கிராமத்து மக்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். எந்த குழு அதிக அளவில் மீன் பிடிக்கிறது என்று போட்டி போட்டு இவர்கள் மீன் பிடி திருவிழாவில் கலந்து கொண்டனர். பல சிறுவர்கள், முதியவர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.

    தவறு

    தவறு

    அதிக மக்கள் கலந்து கொள்ளும் விழாக்களை நடத்த கூடாது, ஊர் திருவிழாக்களுக்கு அனுமதி இல்லை என்று கட்டாயமான விதி உள்ளது. அப்படி இருந்தும் கூட மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக வந்து மீன் பிடி திருவிழாவில் கலந்து கொண்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கேஸ்கள் இதனால் மேலும் உயரும் வாய்ப்புள்ளது.

    இரண்டாம் அலை

    இரண்டாம் அலை

    சிவகங்கையில் நேற்று 55 கேஸ்கள் பதிவானது. ஒருவர் நேற்று கொரோனா காரணமாக பலியானார். அங்கு 549 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்து உள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை இன்னும் முழுதாக முடியவில்லை. மக்கள் அதிக அளவில் வெளியே சென்றால், அது மூன்றாம் அலைக்கு வழி வகுக்கும் என்று ஏற்கனவே எய்ம்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நிலை என்ன

    நிலை என்ன

    அப்படி இருக்கும் போது சிவகங்கையில் நடப்பது போன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் மூன்றாம் அலையை தூண்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆகஸ்ட் மாதம் மூன்றாம் அலை இந்தியாவில் ஏற்படலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Coronavirus: People gathered in large to celebrate the fishing festival in Sivagangai today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X