போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் பலி.. போலீஸ் FIR-ல் தகவல்!
சிவகங்கை: "போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறை விசாரணைக்கு அழைத்துச்சென்ற மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டதில் கடும் சித்திரவதைக்கு ஆளானதற்கான அடையாளங்கள் அவரது உடலில் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளியம்மன் கோயில் காவலாளியாக அஜித்குமார் (29) பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தக் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணின் காரில் இருந்த நகை காணாமல் போனதாக, அவர் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தனது காரை நிறுத்துவதற்காக சாவியை அஜித்குமாரிடம் கொடுத்ததாக புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், காவல்துறை விசாரணையில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டதில், அவரை கடும் சித்திரவதை செய்ததற்கான அடையாளங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அஜித்குமார் உடல் முழுவதும் பல்வேறு இடங்களிலும் காயங்கள் இருந்ததாகவும், உட்புற உறுப்புகளிலும் பலவிதமான காயங்கள் காரணமாக, ரத்தக் கசிவு ஏற்பட்டு அவை அவரது மரணத்துக்கு காரணமாக இருக்கக்கூடிய பாதிப்புகளாக இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயலும்போது கீழே விழுந்ததில் வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்தேகத்தின் பேரில் அஜித் குமாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, நகை திருடு போன காரை யார் பார்க்கிங் செய்தது என பலமுறை கேட்டபோது, அஜித் குமார் மாறி மாறி 3 பேரின் பெயர்களை சொன்னதாக கூறப்படுகிறது. அவர்கள் 3 பேரையும் அழைத்து விசாரித்த போது, அவர்கள் யாரும் காரை பார்க் செய்யவில்லை என தெரியவந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஜித் குமாரின் தம்பி நவீன் குமாரை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது அஜித் திருடியதை ஒப்புக்கொண்டதாகவும், திருடிய நகைகளை கோவிலுக்கு பின்புறம் உள்ள மாட்டுக் கொட்டகையில் வைத்துள்ளதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அங்கு சென்று போலீசார் தேடியபோது நகை கிடைக்கவில்லை என போலீசார் எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளனர்.
பின்னர், போலீசாரிடம் இருந்து தப்பி ஓட அஜித் குமார் முயன்றபோது அவர் கீழே விழுந்ததில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கும் அங்கிருந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், அதன் பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. ஆனால், செல்லும் வழியிலேயே அஜித் குமார் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அஜித் குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை திங்கட்கிழமை (ஜூன் 30) இரவு கிடைத்தது. அதன் அடிப்படையில் 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த 5 போலீசார் மீதும் தற்போது கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications