சிவகங்கை தொகுதியில் போட்டியிட எச். ராஜா தயார்… ஆனா, ஒன்னு
Recommended Video

காரைக்குடி: கட்சி வாய்ப்பளித்தால் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவேன் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் ஐந்து ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கியும், மீண்டும் பிரதமராக வரவேண்டும் எனக் கோரியும் இருசக்கர வாகன பேரணியை எச். ராஜா தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது: பாரதிய ஜனதா கட்சியுடன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாரிவேந்தருக்கு பெரிய அளவில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

நஷ்டம் இல்லை
ஆனால், ஒரு தொகுதியில் கூட அவருடைய கட்சி வெற்றி பெறவில்லை. அதனால், அவர் திமுக கூட்டணிக்கு செல்வதால் எங்களுக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 19.5 சதவீத வாக்குகள் பெற்றன. அப்போது, திமுக கூட்டணி எங்களைவிட 2 சதவீத வாக்குகள் தான் அதிகம் பெற்றது.

40 க்கு 40 வெற்றி
தற்போது அதிமுக கூட்டணியில் பாஜக சேர்ந்துள்ளதால், மிகவும் வலிமையான கூட்டணியாக அமைந்துள்ளது. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் பாஜக - அதிமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

பாஜக அரசு சரியான பதிலடி
மேலும், பாகிஸ்தானுக்கு சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, அந்த நாடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆளும் பாஜக அரசு சரியான பதிலடி கொடுத்ததன் எதிரொலியாக இந்திய விமானி அபிநந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றார்.

சிவகங்கை தொகுதி
மேலும், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு; தேர்தலில் வேட்பாளராக அறிவிப்பதும், கட்சி பதவிகள் அறிவிப்பதிலும் தலைமை எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு நான் கட்டுப்படுவேன் என்றும் பதிலளித்தார்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
சில்லுண்டிகளை வச்சிக்கிட்டு? தவெக விஜய் அரசை துவம்சம் செய்த எச்.ராஜா.. அண்ணாமலைக்கும் விழுந்த செக் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications