சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அது என்ன.. திமுகவை பார்த்து இப்படி ஒரு வார்த்தையை சொல்லிட்டாரே எச்.ராஜா!

Google Oneindia Tamil News

Recommended Video

    திமுக தேர்தல் அறிக்கையை விமர்சிக்க பாஜகவுக்கு அருகதை கிடையாது - கனிமொழி

    சிவகங்கை: 3 படி லட்சியம், 1 படி நிச்சயம்னு சொன்னாங்களே.. என்னைக்காவது ஒரு படி தந்திருக்கா திமுக? என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.

    சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட அதிமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எச்.ராஜா கலந்து கொண்டார். பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது:

    H Raja says about DMKs manifesto

    "நாடாளுமன்ற 30 தொகுதிகள் மட்டுமல்ல, இடைத்தேர்தலிலும் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறத்தான் போகுது. இந்த வெற்றிக்கு மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாமே ரொம்ப உதவியாக இருக்கும்" என்றார்.

    திமுக தேர்தல் அறிக்கை பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இட் இஸ் ஜஸ்ட் எ டிஷ்யூ பேப்பர். காரணம் என்னன்னா, ஒருகோடி மக்கள் நலபணியாளர்கள், 50 லட்சம் சாலை பணியாளர்கள், இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை குடும்பம் இருக்கு?

    DMK vs AMMK: திமுக vs அமமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள் DMK vs AMMK: திமுக vs அமமுக நேருக்கு நேர் மோதும் லோக்சபா தொகுதிகள் & வேட்பாளர்கள்

    ஒன்றரை கோடி குடும்பம் இருக்கா இல்லையா? இந்த ரெண்டில் மட்டும் இவங்களுக்கு வேலை செய்ய முதல்ல இடம் இருக்கா? அவங்களுக்கு ஊதியம் தர நிதி இருக்கா? மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அறிவிக்கின்ற திட்டங்களுக்கு நிதி எங்கிருந்து வரும்? 1967தான் எனக்கு ஞாபகம் வருது. " 3 படி லட்சியம் 1 படி நிச்சயம்" என தெரிவித்தார்கள். ஆனால் என்றைக்காவது ஒரு நாள் 1 படி வழங்கினார்களா?" என கேள்வி எழுப்பினார்.

    சிவகங்கை மாவட்டத்திற்கான வளர்ச்சி திட்டம் குறித்த கேள்விக்கு "பல ஆண்டுகள் எம்.பியாகவும் அமைச்சராகவும் ப.சிதம்பரம் இருந்துள்ளார். ஆனால் ஒரு அம்பது காசு கூட சிவகங்கைக்கு வரவில்லை" என்றார்.

    English summary
    H Raja has criticized the DMK's election Manifesto as a tissue paper.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X