விருதுநகர நான் வச்சிக்குறேன்.. கட்சிய நீ வச்சிக்கோ.. சரத்குமார் பாஜக டீலிங்.. விந்தியா அட்டாக்!
சிவகங்கை: பாஜகவில் சரத் குமார் இணைந்தது பற்றியும், பாஜக கூட்டணியில் மற்ற கட்சிகள் இணைந்தது பற்றியும் படு கிண்டலாக பிரச்சாரத்தின்போது பேசியுள்ளார் அதிமுக நட்சத்திர பேச்சாளரான நடிகை விந்தியா.
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா, ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்வார். அந்தவகையில் இந்த முறையும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக நடிகை விந்தியா பிரச்சாரம் செய்து வருகிறார்.

நடிகை விந்தியா பிரச்சாரம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், "ஏன் இருக்கோம், எதுக்கு இருக்கோம்னே தெரியாம ஒரு கூட்டணி சேர்ந்திருக்காங்கன்னா அது பாஜக கூட்டணி தான். அந்தக் கூட்டணியில் யாருக்கும் யாருக்கும் சம்பந்தமே இல்லை.
ஜிகே வாசன், ஜான் பாண்டியன், அன்புமணி ராமதாஸ், பச்சைமுத்து, சரத்குமா.. இவங்க எல்லாம் ஒண்ணு சேர்ந்து என்ன ஆகப்போகுது? மோடி வந்த பிரச்சார மேடையில் இவர்கள் எல்லோரும் வரிசையாக நிற்கும்போது "பிள்பிளிக்கி பிளாப்பி" காமெடி தான் ஞாபகம் வந்தது. தேர்தலுக்குப் பிறகு என்ன ஆகப்போகுதோ தெரியலை.
சரத் குமார் டீலிங் தெரியுமா?: பாரதிய ஜனதா கட்சியில் சரத்குமார் சேர்ந்த டீலிங் தெரியுமா? சரத்குமார் கட்சியில சேரப் போகும்போது நோட்டு எவ்வளவு? சீட்டு எவ்வளவுன்னு அண்ணாமலைகிட்ட கேட்டிருக்காரு. அண்ணாமலையோ உங்க கட்சி எவ்வளவுன்னு கேட்க, அந்த டீலிங் சரத்குமாருக்கு பிடிச்சுப்போய்விட்டது.
உடனே, விருதுநகர நான் வச்சுக்கிறேன். என் கட்சிய நீங்க வச்சுக்கோங்கன்னு கொடுத்திட்டாரு. மறுநாள் மனைவி ராதிகா சரத்குமாரை அழைச்சுக்கிட்டு அண்ணாமலை வீட்டுக்குப் போயிருக்காரு சரத்குமார். என்னங்க கட்சிய இணைச்சுட்டு ரெண்டு பேரு மட்டும் வந்திருக்கீங்கன்னு கேட்டாரு... நாங்க ரெண்டு பேரும் தான் கட்சின்னு சொன்னாராம் சரத்குமார்.
இவங்க கூட பரவால்ல: இவங்க எல்லாம் கூட பரவாயில்லை. 2 பேரை நினைச்சாத்தான் ரொம்ப கஷ்டமா இருக்கு. டிடிவி தினகரன், ஓபிஎஸ். டிடிவியும் ஓபிஎஸ்ஸும் பாஜக கிட்ட அசிங்கப்பட்டு போனாங்க. எனக்கு ஒரு சீட்டு போதும் என்று சொன்ன டிடிவி தினகரனுக்கு ரெண்டு வச்சுக்கங்கன்னு 2 சீட் கொடுத்திருக்காங்க. எப்படி இருந்த ஓபிஎஸ்? பாவம்.. பேச்சுவார்த்தை.. பேச்சுவார்த்தைன்னு போயி ஒரு சீட்ட வாங்கி அவரே நிக்கிறாரு." என்று பேசினார்.
மேலும் விந்தியா பேசுகையில், "காங்கிரஸ் கட்சியில தமிழகத்தில் போட்டியிடுவதற்கே ஆள் இல்லை. திமுகவிடம் 6 என காங்கிரஸ் எழுதி கொடுத்ததை திமுக தலைமை 9 என நினைத்து 9 சீட்டுகளை கொடுத்துவிட்டனர். ஆனால் போட்டியிட ஆள் இல்லாததால் சிவகங்கையில் கார்த்தி சிதம்பரத்திற்கே திரும்ப சீட் கொடுத்துவிட்டனர்.
கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுக்கே பிடிக்காது. மோடியைப் பெருமையாகப் பேசிய கார்த்தி சிதம்பரம் பாஜகவுக்காகத் தான் இங்கு சீட் வாங்கியுள்ளார். அவருக்கு ஓட்டு போடுவது, ராகுல் காந்தியை முதுகில் குத்துவது போன்றது." எனப் பேசினார் விந்தியா.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications