போட்டுக்க ஒரு பேண்ட் சர்ட் கூட சிவகங்கையில் இல்லை.. கார்த்தி சிதம்பரம் பேச்சால் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: தான் அணிந்து கொள்ள ஒரு பேண்ட் சர்ட் கூட சிவகங்கையில் இல்லை என்றும், சென்னையில் தான் இருப்பதாகவும் அந்த தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மாணவர்கள் மத்தியில் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்க சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் திட்டமிட்டார்.

இதற்காக அவர் சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் 50 மாணவ மாணவிகளுடன் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

மாணவி கேள்வி

மாணவி கேள்வி

அப்போது ஒரு மாணவி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை சுட்டிக்காட்டி, நீங்கள் சிவங்கையில் வெற்றி பெற்றால் பெண்கள் பாதுகாப்புக்கு என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பினார்.

பெற்றோர்கள் பொறுப்பு

பெற்றோர்கள் பொறுப்பு

அதற்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், பெண்கள் பாதுகாப்பு பிரச்சனையை சட்டம் போட்டு தடுக்க முடியாது. சிறுவயது முதலே ஆண்குழந்தைகளிடம், பெண்களிடம் மரியாதை கொடுத்து நடந்து கொள்ளும்படி பெற்றோர் பழக்க வேண்டும். அப்படி செய்தால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும், சட்டம் கொண்டுவரலாம், ஆனால் சட்டம் மட்டுமே தீர்வு அல்ல என்றார்.

வேஷ்டி சட்டை

வேஷ்டி சட்டை

முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு பேண்ட் சட்டையில் வந்திருக்க வேண்டும் என்றும் ஆனால் தான் அணிந்து கொள்ள சிவகங்கையில் ஒரு பேண்ட் சர்ட் கூட இல்லை என்றும் சென்னையில் இருப்பதாகவும், அதனால் வேஷ்டி சட்டையில் வந்திருப்பதாகவும் மாணவர்கள் மத்தியில் பேசினார். இப்போதே ஒரு பேண்ட் சர்ட் கூட சிவகங்கையில் இல்லை என்றால், வெற்றி பெற்ற பின்னர் தொகுதி பக்கம் வருவாரா என கேள்வி எழுந்துள்ளது.

11வது தேர்தல்

11வது தேர்தல்

சிறு வயதில் இருந்தே தேர்தலை சந்தித்து வருவதாக கூறிய கார்த்தி சிதம்பரம் 6 வயதில் இருந்த தேர்தலை சந்தித்த தனக்கு இது 11வது தேர்தல் எனக்கூறி அங்கிருந்தவர்களை அதிரவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+