"என் மகன் என் பேரன்" திமுக யாத்திரை நடத்தினால் இப்படித்தான் பெயர் வைத்திருக்கும்.. அண்ணாமலை அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: பாஜகவிற்கும் திமுகவிற்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் உள்ளது என்றும் பாஜக என் மண் என் மக்கள் என்று யாத்திரை நடத்துகிறது. இதே திமுக இந்த யாத்திரையை நடத்தினால் என் மகன் என் பேரன் என வைத்திருக்கும் என அண்ணாமலை விமர்சித்தார்.

தமிழக பாஜக தலைவர் கே அண்ணாமலை ராமநாதபுரத்தில் என் மண் என் மக்கள் என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கடந்த 3 நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை இன்று சிவகங்கை வந்தார். அதன்படி, அண்ணாமலையின் சிவகங்கை பேருந்து நிலையம் முன்பாக இன்று திறந்த வேனில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

 If DMK is conducted Padayatra the Name will be En Magan En peran, BJP Annamalai slams

"என் மண் என் மக்கள்" யாத்திரையில் நடந்து வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இன்னும் எல்லா வசதி வாய்புகளும் கொடுக்கப்படுகிறது. ஊதியம் வருகிறது. அல்லவன்ஸ் கிடைக்கிறது. அமைச்சருக்கான சம்பளம் எதற்கு கிடைக்கிறது என்றால் மக்கள் பணி செய்வதற்கான ஊதியம். அரசியலில் முழு நேரமாக வேலை பார்க்கிறார்கள் என்பதற்காகத்தான் அமைச்சர்களுக்கு சம்பளம்.

கடன் வாங்கியதில் முதலிடம்: ஆனால் எந்த வேலையும் பார்க்காமல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு மாதா மாதம் நான் சம்பளம் கொடுத்து துறை இல்லாமல் அமைச்சராக வைத்திருப்பேன் என்று ஸ்டாலின் சொல்கிறார் என்றால் எந்த அளவுக்கு ஊழலுக்கு திமுகவின் முதல் குடும்பம் உள்ளது என்று தெரிகிறது. தமிழகத்தில் நடக்கும் ஊழல் ஆட்சி நம்மை சுரண்டிக் கொண்டு இருக்கிறது. இப்படியே இன்னும் 2, 3 வருடங்கள் போனால் நம்மிடம் இருக்கும் உடை மட்டும் தான் மிஞ்சுமே தவிர வேறு எதுவும் மிஞ்சாது.

நம்பர் 1 மாநிலமாக மாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு முதல்வர் ஸ்டாலின் வந்தார். உண்மையாகவே நம்பர் மாநிலமாக எதில் மாற்றியிருக்கிறார் என்றால் இந்தியாவிலே கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழகம். 3-வது இருந்தோம். போன வருஷம் 2-வது வந்தோம்.. இந்த ஆண்டு ஜூலையில் முதலிடத்திற்கு வந்துவிட்டோம். ஒவ்வொருவர் தலைமீதும் 3 லட்சத்து 52 ஆயிரம் கடன் உள்ளது. மக்கள் பெயரை சொல்லி கடனை வாங்கி அவர்கள் செல்வம் கொழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த மாடலின் பெயர்தான் திராவிட மாடல்.

"என் மகன் என் பேரன்": பாஜகவிற்கும் திமுகவிற்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் உள்ளது. ஒரே வரியில் சொல்வது என்றால் பாஜகவுக்கு என் மண் என் மக்கள் என்பதுதான்.. இதே திமுக இந்த யாத்திரையை நடத்தியிருந்தால் "என் மகன் என் பேரன்" என்று பெயர் வைத்திருக்கும். ஒன்பது ஆண்டாக மோடி எந்தவித ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டை பிரதானமாக வைத்து அல்லும் பகலும் பிரதமர் மோடி வேலை செய்து கொண்டு இருக்கிறார். அதனால்தான், பொருளாதார வளர்ச்சியில் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா வந்துள்ளது.

மத்திய அரசின் திட்டம் அனைத்தும் சாமானிய மக்களுக்கு முதன்முதலாக சென்றுள்ளது. அதற்கு காரணம் நாட்டை ஆள்வது சாமானிய மனிதர். சமானிய குடும்பத்தில் பிறந்த ஒரு சாமானிய மனிதர் ஆட்சிக் கட்டிலில் இருப்பதால் சாமானிய மனிதரை பற்றி யோசிக்கக் கூடிய திறன் பிரதமருக்கு உள்ளது. தமிழகத்தில் 27 மாத காலமாக திமுக ஆட்சி நடத்தி கொண்டுள்ளது. என் மகன் என் பேரன் என்று சிறப்பாக ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+