எடப்பாடிகிட்ட விஸ்வாசமே இல்லை.. 2 ஆயிரம் கொடுத்தாலும் 2026ல் ஜெயிக்க முடியாது! கடுகடுத்த கருணாஸ்!
சிவகங்கை: விஸ்வாசம் என்றால் எடப்பாடி பழனிசாமிக்கு என்னவென்றே தெரியாது எனவும், செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கியதால் கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள், 2000 ரூபாய் கொடுத்தாலும் வரும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஜெயிக்க முடியாது என நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான கருணாஸ் கூறியுள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வெளிநாடுகளில் தமிழ்நாடு வளர்ச்சிக்காக தொழில் முதலீட்டிற்காக 15,516 கோடி ஈர்த்து 14 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியளித்துள்ளது பாராட்டப்படக்கூடிய ஒரு செய்தி.
முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 2026 தேர்தலில் பாஜக அரசியல் ஆதாயம் தேட அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. அவர்களின் முகத்திரையை வெளிக்கொணர, பாஜகவின் தமிழர் விரோதப் போக்கை எடுத்துரைக்க, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் முயற்சியில் பாஜகவின் அரசியல் சூதாட்டம் குறித்து 400 பக்கத்தில் புத்தகம் எழுதி வருகிறேன்.

கருணாஸ்
கீழடி, விவசாயம், நீட், விவசாயிக்கு எதிராக பாஜக செயல்படுவதை அவர்களின் முகத்திரையை கிழிக்க எளிமையாக மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் புத்தகமாக எழுதி உள்ளேன். அதனை தமிழக முதல்வர் விரைவில் வெளியிடுவார். அதிமுக சார்பில் ஏற்கனவே திருவாடானை தொகுதியில் போட்டியிட அம்மா வாய்ப்பளித்ததை நன்றியோடு நினைவுகூறுகிறேன். முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கான வாய்ப்பை பெற்று எனக்கு அரசியல் அடையாளம் காட்டியது அம்மா தான்.
பாஜக
நூறு ஆண்டுகள் கடந்தாலும் அதிமுக எஃகுக் கோட்டையாக புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மாவும் உருவாக்கியதை எடப்பாடி குழி தோண்டி புதைத்து வருகிறார். சுயநலத்திற்காக, கட்சி சொத்துக்காக அதிமுகவை படுகுழியில் எடப்பாடி தள்ளப் போகிறார். அதிமுகவை அழிக்கப் போகிறார். அதிமுகவை வெளியிலிருந்து யாரும் அழிக்க வேண்டாம் எடப்பாடியே அழிப்பார். தான் செய்யும் தவறுகளை மறைக்கவே எடப்பாடி பழனிசாமி பொய் பேசி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி நம்பிக்கை துரோகம் செய்பவர். அவருக்கு வரும் தேர்தலிலே எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் தக்க பாடம் புகுட்டுவார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்தேன். பாஜக பாசிச ஆட்சி வரக்கூடாது என்பதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டேன். தமிழகத்தில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதால் இந்த தேர்தலிலும் பிரச்சாரம் மேற்கொள்வேன். அதிமுகவில் இருந்து வெற்றி பெற்ற நான் மீண்டும் அதிமுகவிற்கு செல்ல மாட்டேன். உடைந்த கண்ணாடி உடைந்ததுதான்; மீண்டும் ஒட்டாது. எந்த நிலையிலும் அதிமுக கூட்டணியில் போட்டியிட மாட்டேன்.
திமுக வெற்றி
தமிழ்நாட்டில் திமுகதான் 2026 தேர்தலில் வெற்றிபெறும். வாய்ப்பு அளித்தால் எந்தத் தொகுதியிலும் திமுக சார்பில் போட்டியிடுவேன். நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது, கூட்டம் வருகிறது. விஜய் கட்சி ஆரம்பிப்பது அவருடைய உரிமை, விருப்பம். எத்தனை பேர் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அவர் பிரபல நடிகர்; அவருக்கு கூட்டம் வராமல் இருக்குமா? எனக்கே இவ்வளவு கூட்டம் வரும்பொழுது அவருக்கு கூட்டம் வராதா? ஆனால், பேஸ்புக், வாட்ஸ்ஆப்பிலேயே அரசியல் செய்ய முடியாது.
கொங்கு மண்டலம்
எடப்பாடி பழனிசாமியை அன்றும் எதிர்த்தேன். இன்றும் எதிர்ப்பேன். எனக்கு வேஷம் போடத் தெரியாது. அவரிடம் நன்றி, விசுவாசம், உண்மை எதையும் எதிர்பார்க்க முடியாது. அவரைப் பற்றி எனக்கு முழுமையாகத் தெரியும். வரும் தேர்தலில் 2000 ரூபாய் கொடுத்தாலும் எடப்பாடி வெற்றி பெறுவது கடினம். செங்கோட்டையனை நீக்கியதால் கொங்கு மண்டல மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். எடப்பாடி அரசியல் செய்வது சுயநலத்திற்காகத்தான். அதிமுக கட்சியை படுகுழியில் தள்ளப் போகிறார். மரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்க மாட்டேன்" என்றார்.
-
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
இழுத்து பிடித்த எடப்பாடி பழனிசாமி.. விட்டு விலகும் நிர்வாகிகள்! மதுராந்தகத்தில் சம்பவம் செய்யும் தவெக! -
அவர் வரலாறு தெரியுமா.. சந்தர்ப்பவாத அரசியல்வாதி.. ஆதவ் அர்ஜுனாவை வெளுத்த கேபி முனுசாமி -
ராஜினாமா செய்து தவெகவில் சேர்ந்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சிக்கல்.. நோட்டீஸ் அனுப்பியது ஏன்? சபாநாயகர் விளக்கம் -
பனையூர் பக்கம் திரும்பும் ரராக்கள்.. காலியாகும் அதிமுக கூடாரம்? எடப்பாடி பழனிசாமி முக்கிய மீட்டிங்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications