கீழடி அகழாய்வு.. மத்திய அரசால் மீண்டும் சர்ச்சை.. ஒன்றுமே இல்லை என கூறியவரிடம் அறிக்கை தர உத்தரவு
சென்னை: கீழடி 3ம் கட்ட அகழ்வராய்ச்சி குறித்து விரிவான அறிக்கையை தயாரிக்க 2019ம் ஆண்டில் ஓய்வு பெற்ற தொல்லியல் நிபுணர் ஸ்ரீராமனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில்மத்திய - மாநில அரசுகள் இடையே மோதல் நடந்து வரும் நிலையில் கீழடி அகழாய்வில் குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியவரிடம் தற்போது மத்திய அரசு அறிக்கை கேட்டு இருப்பது சர்ச்சையாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அமைந்துள்ளது. இங்கு அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. 3 கட்ட அகழ்வாராய்ச்சி பணியின்போது ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. மண்டை ஓடு, பழங்கால ஓடுகள், குடுவைகள், மணிக்குண்டுகள் உள்பட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன.

தமிழ் மக்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்துடன் வாழ்ந்துள்ளதை எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆய்வுகள் அமைந்துள்ளன. மேலும் கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு செய்து அறிவியல் வழியில் 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதனின் முகத்தை இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் வடிவமைத்து வெளியிட்டுள்ளது.
இருப்பினும் மத்திய அரசு கீழடி அகழ்வராய்ச்சி தொடர்பான அறிக்கையை ஏற்க மறுத்து, அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களுக்கு அங்கீகாரம் தரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனை முதல்வர் ஸ்டாலின், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட பலரும் சுட்டிக்காட்டி விட்டனர். தமிழகர்களின் நாகரீகத்தை மறைக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் மத்திய அரசோ இன்னும் ஆய்வுகள் நடத்தி கூடுதல் தகவல்கள் வேண்டும் என்று தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தற்போது மத்திய அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது கீழடி 3ம் கட்ட அகழ்வராய்ச்சி தொடர்பாக அறிக்கை தயாரிக்க ஓய்வு பெற்ற தொல்லியல் இயக்குநர் ஸ்ரீராமனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதாவது கீழடி 3ம் கட்ட அகழ்வராய்ச்சி மற்றும் ஈரோடு மாவட்டம் கொடுமணலில் அவர் தலைமையிலான குழுவினர் அகழ்வாராய்ச்சி நடத்தினர். இதுதொடர்பாகத அறிக்கைகளை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கைகளை தயாரிக்க அனுமதி கோரி அவர் மத்திய தொல்பொருள் ஆய்வு மையத்துக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் தற்போது அதற்கு அனுமதி கிடைத்துள்ளது.
மேலும் மத்திய அரசின் இந்த அனுமதி சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஏனென்றால், இவர் தனது 3ம் கட்ட கீழடி அகழாய்வில் குறிப்பிடத்தக்க எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு அப்போது கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் தான் தற்போது மத்திய அரசு அவரிடம் 3ம் கட்ட கீழடி அகழாய்வு குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் இவர் கடந்த 2019ம் ஆண்டிலேயே பணி ஓய்வு பெற்றுவிட்டார். தற்போது அவரிடம் அறிக்கை கேட்டு இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.
இருப்பினும் இதுபற்றி ஸ்ரீராமன் கூறுகையில், ‛‛நான் ஓய்வு பெற்றதால் 2 அறிக்கைகளும் நிலுவையில் இருந்தன. அறிக்கைகளைத் தயாரிக்க தேவையான பொருட்களை அணுகுவதற்கு அகழ்வராய்ச்சி துறையின் ஒப்புதலைப் பெற்றேன். தொடர்புடைய அனைத்து பொருட்களும் சென்னையில் இருப்பதால், விரைவில் அறிக்கைகளைத் தயாரிக்கத் தொடங்குவேன்" என்றார்.
முன்னதாக கீழடியில் முதல் மற்றும் 2ம் கட்ட அகழ்வராய்ச்சி என்பது தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. குறிப்பாக செங்கல் கட்டமைப்புகளை கண்டுபிடித்தார். ஆய்வு பணிகள் குறித்து இறுதி அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா தொல்லியல் துறையிடம் சமர்ப்பித்தார். ஆனால் அதனை தொல்லியல் துறை ஏற்கவில்லை. அறிக்கையில் சில விஷயங்களை திருத்தம் செய்யும்படி கூறியது. ஆனால் அமர்நாத் ராமகிருஷ்ணா திருத்தங்களை செய்ய மறுத்துவிட்டார். இதனால் அந்த அறிக்கைகள் கிடப்பில் உள்ளன. அதன்பிறகு அவர் அசாமுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பிறகு தான் கீழடியில் 3ம் கட்ட அகழாய்வை பிஎஸ் ஸ்ரீராமன் மேற்கொண்டார். அப்போது அவர் முன்பு கண்டறியப்பட்ட செங்கல் கட்டமைப்புகள் தொடர்பான தொடர்ச்சி எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியது சர்ச்சையை கிளப்பியது. தற்போது மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் அவர் மேற்கொண்ட கீழடி 3ம் கட்ட அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையை தயார் செய்யும் பணியை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக












Click it and Unblock the Notifications