கீழடியில் கிடைத்த பொக்கிஷம்! அகழாய்வில் வித்தியாசமான சுடுமண் பானை கண்டெடுப்பு!
சிவகங்கை: 2,600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்கால மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கீழடியில் கிடைக்கப்பெற்று வரும் நிலையில், 11-வது கட்ட அகழாய்வில் புதிய சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கீழடியில் இது போன்ற பானை கண்டெடுக்கப்பட்டதில்லை.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அகழாய்வு களத்தின் தொல்லியல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினரின் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் மூலம் அங்கு நகர நாகரிகம் இருந்ததற்கான முடிவுக்கு ஆய்வாளர்கள் வந்தனர்.

பின்னர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. தொடர்ந்து அடுத்த கட்ட அகழாய்வை நடத்திய ஸ்ரீராமன், ஏற்கனவே கிடைத்த பொருட்கள் கிடைப்பதாக கூறி அகழாய்வை நிறைவு செய்தார்.
தற்போது கீழடியில் 11-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் மார்ச் 11 ஆம் தேதி முதல் இந்த அகழாய்வு நடைபெற்று வருகிறது. தொல்லியல் துறை இயக்குநர் ரமேஷ் தலைமையில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கீழடி11ம் கட்ட அகழாய்வில் மிகச்சிறிய வித்தியாசமான வடிவிலான குறுகிய வாய் கொண்ட சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுவரை கீழடியில் இது போன்ற பானை கண்டெடுக்கப்பட்டதில்லை. கெண்டி மூக்கு பானை, சிவப்பு நிற மூடியுடன் கூடிய பானை என அடுத்தடுத்து அகழாய்வில் கிடைத்தாலும் தற்போது கிடைத்த பானை அதில் இருந்து புதிய வடிவத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications