கொட்டுன வார்த்தைக்கெல்லாம் சேர்த்து வைத்து எச். ராஜா தலையில்கொட்டிய சிவகங்கை!
Recommended Video
சிவகங்கை: சிவகங்கை: சிவங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஹெச் ராஜாவைவிட 2 லட்சத்து 56 ஆயிரத்து 577 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார்
மக்களவை தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதில் பாஜக கூட்டணி 349 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 90க்கும் மேற்பட்ட இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

சிவகங்கை தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார்.
அதிமுக பாஜக கூட்டணி சார்பில் பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா போட்டியிட்டார்.
தற்போது 17 சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 4 லட்சத்து 36 ஆயிரத்து 131 ஓட்டுகள் பெற்று முத்ல் இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் ஹெச் ராஜா 1 லட்சத்து 79 ஆயிரத்து 554 ஓட்டுக்கள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் ஹெச் ராஜாவைவிட 2 லட்சத்து 56 ஆயிரத்து 577 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் இருக்கிறார். இதனால் கார்த்தி சிதம்பரத்தின் வெற்றி உறுதியகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் அமமுக வேட்பாளர் பாண்டி 94 ஆயிரத்து 980 வாக்குகள் பெற்று 3வது இடத்திலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட சினேகன் 17 ஆயிரத்து 891 வாக்குகள் பெற்று 4வது இடத்திலும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications