அபி என் டிக்டாக் ஃபிரண்டு... வேற ஒன்னும் கிடையாது.. போலீஸில் தஞ்சமடைந்த வினிதா!

பெண்ணை நர்ஸ் ஒருவர் இழுத்து கொண்டு மாயமாகி உள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    டிக்டாக் தோழியின் பெயரை கெடுத்த கணவன்.. மனைவி ஆவேசம்-வீடியோ

    தேவகோட்டை: கல்யாணமான நர்ஸ் ஒருவர்.. 40 சவரன் நகையுடன் டிக்டாக்கில் அறிமுகமான தோழியை இழுத்து கொண்டு ஓடிவிட்டார் என்று சொல்லப்பட்ட சம்பவத்தில், தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாயமானதாக சொல்லப்பட்ட பெண், போலீசில் தஞ்சம் அடைந்துள்ளதுடன், பரபரப்பு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

    தேவகோட்டையைச் சேர்ந்தவர் வினிதா. இவருக்கும் ஆரோக்கிய லியோவுக்கும் போன ஜனவரி மாதம் கல்யாணம் நடந்தது. சிவகங்கையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், ஆரோக்கிய லியோ சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

    இதனால் தனிமையில் அவதிப்பட்ட வினிதா டிக்டாக் ஆப்பில் நுழைந்து நேரத்தை செலவிட ஆரம்பித்தார். அப்போதுதான் திருவாரூரை சேர்ந்த அபியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    மாற்றம்

    மாற்றம்

    இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி, புது மனைவியை பார்க்க ஆசையுடன் லியோ வெளிநாட்டில் இருந்து வந்தார். ஆனால் மனைவியின் நடவடிக்கையில் நிறைய மாற்றம் தெரிந்ததாகவும், இதனால் வினிதாவின் செல்போனை எடுத்து பார்த்தபோதுதான் அபியுடன் "நெருக்கமான" போட்டோக்களை கண்டு கணவர் அதிர்ந்ததாகவும் சொல்லப்பட்டது.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    பின்னர், மனைவியை மாமியார் வீட்டுக்கு கூட்டி சென்று நடந்த விஷயங்களை கூறி லியோ அறிவுறுத்தியும், வினிதா வீட்டில் இருந்த 40 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு அபியுடன் ஓடிவிட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. வினிதாவின் குடும்பத்தினரே இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்லி, போலீசில் புகார் அளித்து, அபியும், வினோதினியும் சேர்ந்து செய்த டிக்டாக் வீடியோவையும் ஒப்படைத்தனர். இந்த புகாரின் பேரில் அபியையும், வினிதாவையும் தேடும் முயற்சியில் போலீசார் இறங்கினார்.

    தஞ்சம்

    தஞ்சம்

    இதனிடையே, அபியுடன் ஓடிப்போனதாக சொல்லப்பட்ட வினிதா சிவகங்கை ஸ்டேஷனில் இன்று மாலை திடீரென தஞ்சம் அடைந்தார். முன்னதாக, இவர் ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில், அபி என்ற பெண் தனக்கு வெறும் டிக்டாக் தோழிதான் என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

    பாஸ்போர்ட்

    அந்த வீடியோவில் வினிதா பேசும்போது, "16-ம் தேதி நான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். ஏன்னா, எனக்கும் என் வீட்டுக்காரருக்கும் பிரச்சனை. எதுக்காக பிரச்சனைன்னா, அவரு வெளிநாட்டில சிங்கப்பூரில் இருந்தாரு. ஒருநாள் திடீர்னு வந்துட்டாரு. என்கிட்ட சொல்லாம ஏன் வந்தீங்க, பாஸ்போர்ட் இல்லாம எப்படி வந்தீங்கன்னு கேட்டேன். அதுதான் பிரச்சனை.

    ஃபிரண்டு

    ஃபிரண்டு

    என்னை அடிச்சு கஷ்டப்படுத்தினாரு. இங்க பாருங்க.. கால், கண்ணுல காயம் வந்திருக்கு. நான் உடனே என் பிரண்டு அபிகிட்ட பேசினேன். அவ என் டிக்டாக் ஃபிரண்டு. வேற ஒன்னுமே கிடையாது. அந்த பொண்ணுகிட்டே ஏன் பேசுறேன்னு பிரச்சனை செய்தார். அதனாலதான் வீட்டை விட்டு போனேன்" என்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+