அதெல்லாம் வதந்தி..பசும்பொன்னுக்கு சிஎம் விஜய் வர மாட்டார்! யூகங்களுக்கு டாட் வைத்த அமைச்சர் சிடிஆர்!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: முதல்வர் விஜய் பசும்பொன் வருகை போன்ற ஆதாரமற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனவும், சும்பொன்னில் ஹெலிபேட் அமைத்து வரும் பணிகள் நடந்து வருகிறது. துணைக் குடியரசுத் தலைவரின் வருகைக்காகவே இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. தேவர் ஜெயந்தியன்று பசும்பொன்னில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் விளக்கமளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் மணிமண்டபத்தில் 225 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசு விழாவாக நடைபெறும் இந்த விழாவில் அனைத்து கட்சி தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Vijay Pasumpon CTR Nirmal Kumar

அந்த வகையில், தமிழக அரசு சார்பில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அமைச்சர் நிர்மல்குமார்.

சிடிஆர் நிர்மல்குமார்

அப்போது பேசிய அவர்," பசும்பொன்னில் ஹெலிபேட் அமைத்து வரும் பணிகள் நடந்து வருகிறது. துணைக் குடியரசுத் தலைவரின் வருகைக்காகவே இந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. தேவர் ஜெயந்தியன்று பசும்பொன்னில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய் பசும்பொன் வருகை போன்ற ஆதாரமற்ற தகவல்களைப் பரப்ப வேண்டாம். செல்லூர் ராஜூ த.வெ.க ஆட்சி தற்காலிக ஆட்சி என சொல்லியுள்ளார். செல்லூர் ராஜு எடப்பாடி அதிமுகவில் உள்ளாரா? இல்லை வேறொரு அதிமுகவில் உள்ளாரா? சுயநலவாதிகள் எல்லாம் சேர்ந்து அதிமுக என்ற கட்சியை இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். மாலை நேரங்களில் டீ காபி அருந்தும் நேரத்தில் செல்லூர் ராஜு, ஆகியோர்
டைம் பாஸ் செய்வதற்காக பிரஸ்மீட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டிடிவி தினகரன்

முதலில் அவர் எந்த அதிமுகவில் இருக்கிறாரா? என்று கூற வேண்டும். எடப்பாடி அதிமுகவில் இருக்கிறாரா? இல்லை அவர் டிடிவி தினகரன் இடம் செல்கிறாரா? இல்லை டிடிவி அவர்களை பொதுச் செயலாளர் ஆக்கப் போகிறார்களா? என்று முதலில் அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தாராபுரம் தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டது காவல்துறையின் நடவடிக்கை.

தவெக அரசு

த.வெ.க அரசு யாரையும் பழி வாங்கும் அரசு அல்ல. நிதானமாக செயல்படும் அரசு. எப்போதெல்லாம் கருத்துகள் வரம்பு மீறுகிறதோ அப்போதெல்லாம் சட்டம் தன் கடமையைச் செய்யும். யாரையும் பழிவாங்கும் அரசு நம் அரசு அல்ல. எல்லோருக்கும் பேச்சு சுதந்திரம் உண்டு. பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு இந்த ஆட்சி முடிவு செய்கிறது. பொதுவெளியில் பொதுமக்களுக்கு வரம்பு மீறும் செயல்களுக்கு கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+