இது என்ன கொடி?.. நம்ம திமுக கொடி சார்.. மு.க.ஸ்டாலினை சிலிர்க்க வைத்த சிறுமி!
நர்சரி பள்ளி மாணவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்து சொன்னார் மு.க.ஸ்டாலின்
Recommended Video

சிவகங்கை: மு.க.ஸ்டாலினின் கிராம சபை கூட்டம் பெண்களை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் ஈர்த்து வருகிறது. நர்சரி பிள்ளைகளை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி வந்து அவர்களுடன் சிரித்து மகிழ்ந்து கைகுலுக்கி சென்ற சம்பவம் கீழடி பகுதி மக்களை வெகுவாக ஈர்த்து விட்டது.
கீழடியில் ஊராட்சி சபை கூட்டத்தில் நேற்று கலந்து கொண்ட ஸ்டாலின், அங்கு தொல்லியல் ஆய்வு நடைபெற்ற பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிடலாம் என முடிவு செய்தார்.
அதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அந்த பகுதியில் செயல்பட்டு வரும் குறலோவியம் நர்சரி மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பள்ளி காம்பவுண்டுக்கு பின்னிருந்து ஸ்டாலின் கார் வந்து கொண்டிருப்பதை பார்த்ததும் மகிழ்ச்சியோடு கூச்சல் போட ஆரம்பித்துவிட்டனர்.

காரிலிருந்து இறங்கினார்
இதை பார்த்ததும் ஸ்டாலினும் குஷியாகி காரை நிறுத்த சொன்னார். உற்சாகமாக சத்தம் போட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் கார் நின்றதும் ஒரு நிமிஷம் ஸ்தம்பித்து நின்றார்கள். பிறகு ஸ்டாலின் காரை விட்டு கீழே இறங்கி மாணவர்களை நோக்கி நடந்து சென்றார்.

காம்பவுண்ட் சுவர்
இதை பார்த்ததும் மாணவர்கள் திரும்பவும் உற்சாகத்தில் கையை ஆட்டினர். ஸ்டாலின் ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாக கையை குலுக்கினார். நர்சரி பிள்ளைகள் என்பதால் அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் மீது சிலர் ஏறி கொண்டு, ஸ்டாலினுக்கு கை கொடுத்தார்கள்.

இது என்ன கொடி?
அதில் ஒரு மாணவி கையில் ஒரு பெரிய திமுக கொடியை பிடித்து நின்று கொண்டிருப்பதை பார்த்த ஸ்டாலின், இது என்ன கொடி, ஏன் கையில் வைத்திருக்கிறாய்? என கேட்டார். அதற்கு அந்த மாணவி, "இது நம்ம திமுககொடி" என்றதும் ஸ்டாலின் சிரித்து விட்டார்.

வீடியோ எடுத்த பெண்
குட்டி குட்டி மாணவர்களுடன் அந்த பகுதி பெண்களும் நின்றிருந்தனர். அதில் ஒரு பெண் கைகுழந்தையை ஒரு கையில் பிடித்து கொண்டு, மற்றொரு கையில் செல்போனில் ஸ்டாலினை வீடியோ எடுத்து கொண்டிருந்தார். பிறகு அனைவருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பி அகழ்வாராய்ச்சி நடக்கும் இடத்திற்கு சென்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications