சட்டென உடைந்து.. கட்டுக்கடங்காமல் கண்ணீர்விட்ட சீமான்.. உணர்ச்சி வசப்பட்ட சகோதரி.. என்ன நடந்தது?
குடும்ப நிகழ்வுகளில் சீமான் இவ்வளவு உணர்ச்சிகரமாக இருந்து யாரும் பார்த்தது இல்லை.
சிவகங்கை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர்விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எப்போதும் உணர்ச்சிவசமாக பேச கூடியவர். மேடைகளில் ஆக்ரோஷமாக இவர் கருத்துக்களை வைப்பார்.
இவரை லட்சக்கணக்கில் இளைஞர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலும் நாம் தமிழர் கட்சிக்கு 6 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்கு வங்கி உள்ளது.

ஈரோடு கிழக்கு
இப்போது ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக மேனகா அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் நாம் தமிழர் கட்சி சார்பாக தற்போது பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். கள பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டு வருகிறார். விரைவில் சீமானும் இந்த பிரச்சாரத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீமானும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.

ஈரோடு கிழக்கு
கடந்த முறை ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சி 3ம் இடம் பிடித்தது. கடந்த ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் பின்வருமாறு,
நம்பர் 1 - காங்கிரஸ் - திருமகன் ஈவெரா- 67,300 வாக்குகள் - 44.27 வாக்கு சதவிகிதம்
நம்பர் 2- தமிழ் மாநில காங்கிரஸ் - யுவராஜா எம்.- 58,396 வாக்குகள் - 38.41 வாக்கு சதவிகிதம்
நம்பர் 3- நாம் தமிழர் - கோமதி - 11,629 வாக்குகள் - 7.65 வாக்கு சதவிகிதம்
நம்பர் 4- மக்கள் நீதி மய்யம் - ராஜ் குமார் - 10,005 வாக்குகள் - 6.58 வாக்கு சதவிகிதம்
கடந்த தேர்தலில் நாம் தமிழர் - மக்கள் நீதி மய்யம்தான் தேர்தல் முடிவுகளை மாற்றியது. அதனால் இந்த முறை நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் அதிக கவனம் பெற்றுள்ளன.

என்ன நடந்தது?
இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சிவகங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் கண்ணீர்விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீமான் சகோதரி மகளான கயல்விழிக்கு சிவகங்கையில் நேற்று நிச்சயதார்த்தம் நடத்தது. இந்த நிகழ்ச்சியில் சீமான் கலந்து கொண்டார். மணமகன் - மணமகள் இருவருக்கும் சிவகங்கையில் சீமான் வாழ்த்து தெரிவித்தார். தனது சகோதரி மகளை அணைத்து அன்பாக அவருக்கு வாழ்த்து சொல்லி ஆசி வழங்கினார். இந்த நிகழ்வில் சீமான் தொடக்கத்தில் இருந்தே உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.

மகள்
சீமான் தூக்கி வளர்ந்த பெண்தான் கயல்விழி. தனது மகளை போல அன்பாக கயல்விழியை அவர் வளர்த்து வந்துள்ளார். இதனால் இந்த நிச்சயதார்த்த நிகழ்விலும் சீமான் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார். இந்த நிலையில்தான் மேடையில் நிச்சயதார்த்தம் முடிந்ததும் சீமான் கண்ணீர்விட தொடங்கினார். அப்படியே உடைந்து அழுது கண்ணீர்விட தொடங்கினார். கீழே இருந்த தொண்டர்கள் இதை பார்த்து வியந்தனர். இப்படி எல்லாம் சீமான் கண்ணீர்விட்டு அவர்கள் பார்த்தது இல்லை.

சீமான்
குடும்ப நிகழ்வுகளில் சீமான் இவ்வளவு உணர்ச்சிகரமாக இருந்து யாரும் பார்த்தது இல்லை. கண்ணீரை அடக்க முடியாமல் சீமான் தேம்பிக்கொண்டு இருந்தார். அப்போது அருகே இருந்த சகோதரி அன்பரசியும், உறவினர்களும் சீமானை அரவணைத்து சீமானுக்கு அன்பாக ஆறுதல் கூறினர். சீமான் இப்படி உணர்ச்சிகரமாக இருந்ததும், அவர் கண்ணீர் விட்டதும் மேடையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications