கண்களை நோண்டி, மர்ம உறுப்பை சிதைத்து.. முதியவர் கொடூர கொலை.. கல்லல் அருகே பயங்கரம்

சிவகங்கையில் முதியவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆடு மேய்க்க போன முதியவர் கொடூர கொலை.. சிவகங்கையில் கொடூரம்-வீடியோ

    சிவகங்கை: ஆடு மேய்க்க போன நபரின் கண்கள் நோண்டப்பட்டு.. மர்ம உறுப்பு சிதைக்கப்பட்டு.. ஒரு கொடூர கொலை நடந்துள்ளது நம் தமிழகத்தில்!

    சிவகங்கை மாவட்டம் கல்லல் தமிழர் தெருவினை சேர்ந்த தம்பதி திருநாவுக்கரசு - வசந்தா. திருநாவுக்கரசு, அரசு பஸ்ஸின் டிரைவர். நிர்வாகத்துடன் ஏதோ விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    ஒரு பக்கம் அரசு வேலை என்றிருந்தாலும், திருநாவுக்கரசு சமூக சேவையில் ஈடுபடுபவராம். மக்களுக்கு ஆதரவான விஷயங்களில் குரல் கொடுத்து, போராடியும் வந்திருக்கின்றார். இதை தவிர, தினமும் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள மணிமுத்தாறு ஆற்றுப்பகுதிக்கு ஆடுகளை ஓட்டிச் சென்று மேய்த்து வருவார்.

    திருநாவுக்கரசு

    திருநாவுக்கரசு

    இப்படித்தான் கடந்த திங்கட்கிழமை சாயங்காலம் கிளம்பி போனவர், ஆற்றுப்படுகையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். மிகவும் கொடூரமாக இவரது கொலை நடந்துள்ளது. கண்கள் தோண்டப்பட்டு, அவரது மர்ம உறுப்பு நசுக்கப்பட்ட நிலையில் கொல்லப்பட்டிருப்பதாக திருநாவுக்கரசுவின் குடும்பம் சொல்லி கதறி அழுகிறது.

    கோரிக்கை

    கோரிக்கை

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினாலும், உறவினர்கள் விடுவதாக இல்லை. திருநாவுக்கரசின் சாவில் மர்மம் இருப்பதாககூறினார்கள். போஸ்ட் மார்ட்டம் நடப்பது வீடியோ கேமிராவில் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவிக்கப்படவும் சடலத்தை வாங்காமல் மறியல் செய்தனர்.

    மறியல்

    மறியல்

    மேலும் இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் ஆவேசமாக சிவகங்கை - மானாமதுரை சாலையில் போராட்டம் செய்தனர். ஆனால் இவர் கொலையுண்ட பகுதியில் மணல் திருட்டும் அடிக்கடி நடக்குமாம்.

    விசாரணை

    விசாரணை

    அதேபோல, கொலை நடந்த சமயம், ஆடு ஒன்றும் அங்கு வெட்டி கொல்லப்பட்டுள்ளதாம். இவரை கொன்றது யார்? என்ன பின்னணி? என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் போலீசார் இந்த வழக்கை படுமும்முரமாக விசாரித்து வருகிறார்கள். அவர்களின் விசாரணைக்கு பிறகே முழு உண்மை இந்த கொலையில் தெரியவரும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+