அமெரிக்க அதிபர் டிரம்பே வந்து நின்றாலும்.. உதார்விட்ட பெரிய கருப்பன் ஆதரவாளர்.. ஒரு ஓட்டில் காலி

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: திருப்பத்தூர் தொகுதியிலே எந்த கொம்பாதி கொம்பனும் ஐயா மோடியும், எடப்பாடி பழனிசாமியும், நடிகர் விஜய்யும், ஒரு படி மேல போய் சொல்றேன் அமெரிக்க அதிபர் டிரம்பே வந்து நின்றாலும் அண்ணன் பெரிய கருப்பனுக்கு எதிராக டெபாசிட் வாங்க முடியாது என்று அவரது ஆதரவாளர் பேசிய வீடியோ இப்போது மீண்டும் வைரலாகிறது.. எப்படி வைரலாகிறது என்றால், அன்று டிரம்பையே வம்பிழுத்து பேசிய பேசினார் திமுகவின் பெரிய கருப்பன் ஆதரவாளரர்.. இன்று அதே பெரிய கருப்பன் ஒரு ஓட்டில் தோற்றுப்போயிருக்கிறார் என்று தவெகவினர் கிண்டல் செய்கிறார்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் திமுகவின் பெரிய செல்வாக்கான தலைவர் என்றால் அது பெரிய கருப்பன் தான். பெரியகருப்பன் தி.மு.க.வில் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்து பெரிய ஆளாக வந்தனர். கிளை, ஒன்றிய, மாவட்ட பொறுப்பு என படிப்படியாக மேலே வந்தவர்.. கடந்த 2006-ம் ஆண்டில் சட்டசபை தேர்தலில் முதல் முறையாக களம் கண்டார் திருப்பத்தூர் தொகுதி போட்டியிட்டதுடன், தன்னை எதிர்த்து நின்ற அ.தி.மு.க. வேட்பாளர் ஒப்பாக் கார்த்திகேயனை 17,873 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அப்போதே அறநிலையத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.

Old Video of Periya Karuppan Supporter Speaking in Tirupattur Constituency Draws Mockery

2011-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. படு தோல்வி அடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. அப்போது தி.மு.க. சார்பில் பலரும் தோற்ற போதிலும், பெரியகருப்பன் வென்றார். அதிமுகவின் ராஜகண்ணப்பனை 1584 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். அதேபோல் 2016-ம் ஆண்டு தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற அ.தி.மு.க. வேட்பாளர் அசோகனை 42,004 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியவர் பெரிய கருப்பன். 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் மருது அழகுராஜை 37,374 ஓட்டுகள் வித்திசாயத்தில் வென்றார்.

இப்படி கடந்த 2006 முதல் 2021 வரை நான்கு முறை தொடர்ந்து திருப்பத்தூர் தொகுதியில் வென்றவர் பெரிய கருபபன். 2021 முதல் 2026 வரை தமிழ்நாட்டில் செல்வாக்கான அமைச்சர்களில் ஒருவராகவும் இருந்தார். தொடர்ந்து 25 ஆண்டுகள் திருப்பத்தூர் வட்டாரத்தில் செல்வாக்காக இருந்த பெரிய கருப்பனுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர்.

அப்படி இருக்கும் ஆதரவாளர்களில் ஒருவர் அண்மையில் பேசும் போது, திருப்பத்தூர் தொகுதியிலே எந்த கொம்பாதி கொம்பனும் ஐயா மோடியும், எடப்பாடி பழனிசாமியும், நடிகர் விஜய்யும், ஒரு படி மேல போய் சொல்றேன் அமெரிக்க அதிபர் டிரம்பே வந்து நின்றாலும் அண்ணன் பெரிய கருப்பனுக்கு எதிராக டெபாசிட் வாங்க முடியாது என்று என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக ஆதரவாளர்கள் எதிர்பார்த்தது போலவே திமுகவின் பெரிய கருப்பன் ஆரம்பம் முதலே முன்னிலையில் இருந்தார். ஆனால் கடைசி கட்டத்தில் அடியோடு மாறியது. தவெகவிற்கு இளைஞர்கள் பலர் வாக்களிக்க தொடங்கினார்கள்.அது மற்ற தொகுதிகளை போலவே திருப்பத்தூரிலும் எதிரொலித்தது. அதிமுக கூட்டணி வேட்பாளர் திருமாறன்ஜியைவிடவும், தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வலுவாக முன்னேறினார்.

இதனால் திமுகவினர் கலக்கம் அடைந்தனர். இறுதியாக கடைசி நேரத்தில் த.வெ.க. வேட்பாளர் சீனிவாச சேதுபதி 83,375 ஓட்டுகளும், தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன் 83,374 ஓட்டுகளும் பெற்றனர். ஒரு ஓட்டு வித்தியாசத்தில் பெரியகருப்பன் தோல்வி அடைந்ததாக கலெக்டர் அறிவித்தார். இதனால் சோகத்துடன் பெரியகருப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினார்கள்.

இதையடுத்து தான் அமெரிக்க அதிபர் டிரம்பே வந்து நின்றாலும் அண்ணன் பெரிய கருப்பனுக்கு எதிராக டெபாசிட் வாங்க முடியாது என்று அவரது ஆதரவாளர் பேசிய வீடியோவை தோண்டி எடுத்து தவெகவினர் கிண்டல் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+