ஆசிரியை அடித்ததாக புகார்.. சிவகங்கை மாணவி தற்கொலை.. பெற்றோர் போராட்டம் நடத்த முடிவு!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: இளையான்குடியில் ஆசிரியை அடித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் போலீசில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என பெற்றோர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அழகர்சாமி- அழகு தம்பதியினர், இவர்களது மகள் கவிதா (17). இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 2 ஆம் தேதி வீட்டில் கவிதா சோகமாக இருந்ததை பார்த்த அவரது தாயார் அழகு, ஏன் சோகமாக இருக்கிறாய் என கேட்டபோது வீட்டுப்பாடம் செய்யாததால் தனது வகுப்பறை ஆசிரியர் சம்சந்த் நிஷா தன்னை அடித்ததாகவும் அதனால் சோர்வாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எலி மருந்து

எலி மருந்து

அதன் பின்னர் தொடர்ந்து மனக் கவலையில் இருந்த கவிதா கடந்த 4 ஆம் தேதி எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்பத்தினர் இவரை சிகிச்சைக்காக பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து அதன் பின்னர் மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மேல் சிகிச்சை

மேல் சிகிச்சை

அதைத் தொடர்ந்து கவிதா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கவிதா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கவிதாவின் தாயார் அழகு இளையான்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதில் தனது மகள் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு நடவடிக்கை

எந்த ஒரு நடவடிக்கை

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து 7 நாட்கள் ஆகியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கவிதாவின் பெற்றோர் தரப்பினர் தெரிவித்தனர். இதையடுத்து பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்தும் மகள் கவிதா சாவிற்கு காரணமான ஆசிரியை சம்சந்த் நிஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப் போவதாக கவிதாவின் பெற்றோர் தரப்பினர் தெரிவித்தனர்.

ஆசிரியை

ஆசிரியை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் ஆசிரியை அடித்ததால் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் புகார் கொடுத்து இன்னமும் சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரணையை கூட பள்ளி நிர்வாகம் முன் வைக்காதது ஏனோ என தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+