சாட்டையை சுழற்றிய தமிழ்நாடு அரசு.. காரைக்குடியில் பெரியார் சிலையை அகற்றிய 2 அதிகாரிகள் டிரான்ஸ்பர்
பெரியார் சிலையை அகற்றிய காரைக்குடி வருவாய் வட்டாட்சியர் இரா.கண்ணன், தேவக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்
சிவகங்கை: காரைக்குடியில் வீட்டின் சுற்றுச் சுவருக்குள் அமைக்கப்பட்ட தந்தை பெரியாரின் சிலை அகற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பெரியார் சிலையை அகற்றிய டிஎஸ்பி மற்றும் வருவாய் துறை வட்டாட்சியரை அரசு அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு இருக்கிறது.
காரைக்குடியை சேர்ந்தவர் இளங்கோவன். திருமயம் பி.எச்.இ.எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் திராவிடர் விடுதலை கழகத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரில் இளங்கோவன் சொந்தமாக வீடு ஒன்றை கட்டி உள்ளார்.
அந்த வீட்டுக்கு தமிழ் இல்லம் என்று பெயர் வைத்த அவர், சொந்தமான வீடு ஒன்றை கட்டி இருக்கிறார். அந்த வீட்டின் சுற்றுச்சுவருக்கு உள்ளே தந்தை பெரியாரின் மார்பளவு பைபர் சிலையையும் இவர் அமைத்து இருக்கிறார்.

அதிகாரிகள் எதிர்ப்பு
தன்னுடைய வீட்டையும், பெரியார் சிலையையும் இன்று திறந்து வைப்பதற்காக திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியை அழைத்து இருக்கிறார். இந்த நிலையில் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இளங்கோவன் வீட்டிற்கு நேற்று சென்று சிலையை அகற்ற கூறி இருக்கிறார்கள்.

பெரியாரியவாதிகள் முழக்கம்
இளங்கோவன் மற்றும் பெரியாரியவாதிகளின் எதிர்ப்பையும் மீறி அதிகாரிகள் பெரியார் சிலைக்கு துணியை போட்டு மூடி அதனை அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறை மற்றும் வருவாய் துறைக்கு எதிராக இளங்கோவன் மற்றும் பெரியாரியவாதிகள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

எச்.ராஜா வீடு
யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக காவல்துறையும் உள்ளாட்சி நிர்வாகமும் சேர்ந்து பெரியாரின் சிலையை அகற்றி உள்ளார்கள் என்றும், தனது வீட்டிற்கும் பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவின் வீட்டிற்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே இருப்பதாகவும் வீட்டின் உரிமையாளர் இளங்கோவன் தெரிவித்தார்.

வழக்கு தொடருவோம்
"தனியார் இடத்தில் சிலை வைக்கலாம் என நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாக உள்ளதை நாங்கள் காவல்துறையிடம் தெரிவித்தோம். சிலையை அகற்றினால் சட்ட விரோதம் என்று சொன்னோம். தனிப்பட்ட முறையில் பெரியார் மீதான காழ்புணர்ச்சியால் அதிகாரிகள் இப்படி நடக்கிறார்கள். காவல்துறையில் காவிகள் ஊடுருவி இருக்கிறார்கள். காவல் துறை மற்றும் வருவாய்த் துறைக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறோம்." என்று அவர் தெரிவித்தார்.

திறக்கப்பட்ட பேனர்
இந்த நிலையில் இன்று காலை காரைக்குடி வந்த திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி அந்த வீட்டில், "இந்த இடத்தில் இருந்த தந்தை பெரியார் சிலையை சட்ட விரோதமாக வருவாய்த்துறை காவல்துறை அகற்றியது" என்று எழுதப்பட்ட பேனரை திறந்து வைத்தார். இந்த இடத்தில் மீண்டும் பெரியார் சிலையை நிறுவுவோம் என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

அதிகாரிகள் டிரான்ஸ்பர்
இந்த நிலையில் பெரியார் சிலையை அகற்றிய காரைக்குடி வருவாய் வட்டாட்சியர் இரா.கண்ணன், தேவக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா, "காரைக்குடியில் பெரியார் சிலையை நிறுவ கடைபிடிக்க வேண்டிய சட்டவிதிகளை சரியாக புரிந்துகொள்ளாமல் சலசலப்பு உண்டான சூழலில் அதிகாரிகள் இருவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது என்றும் #பெரியார் மண் !!!" என்று கூறி இருக்கிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications