திமுக என்னை கார்னர் பண்ணுது! ராஜேந்திர பாலாஜி மைக்கை பிடித்ததும் தாரை தாரையாக கண்ணீர்!
சிவகங்கை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முகமாக உள்ளதால் என்னை திமுகவினர் குறி வைக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும் தன்னை அக்கட்சியினர் மிரட்டி பணிய வைக்க பார்ப்பதாகவும் அவர் தனது குமுறலை கொட்டித் தீர்த்துள்ளார்.
சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: பழனிசாமியின் பிரச்சார முகமாக உள்ளதால் என்னை குறி வைக்கிறார்கள்.

என்னை மிரட்டி பணிய வைக்க திமுக முயற்சிக்கிறது. திமுக ஆட்சியில் என் மீது குறித்து வைத்து கைது செய்தனர். சிவகாசியில் தான் நிற்பேன்... என்னை சட்டமன்ற உறுப்பினர் ஆக்கியது, அமைச்சர் ஆக்கியது எல்லாம் இந்த தொகுதி தான்.. இங்கே தான் போட்டியிடுவேன் என கண்ணீர் மல்க ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அப்போது கட்சியினர் உற்சாகமாக கைத்தட்டினர்.
ராஜேந்திர பாலாஜி அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்தார். அமைச்சராக இருந்த போது ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடியே பத்து லட்சத்தை ஏமாற்றியதாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீஸார் தேடினர். இந்த நிலையில் 18 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு ராஜேந்திர பாலாஜி, கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். அவர் கூறுகையில் அதிமுக - பாஜக கூட்டணி பலமாக உள்ளது. எடப்பாடி பழனிசாமியும் பிரதமர் நரேந்தி மோடியும் சந்தித்திருப்பதே இதற்கு சாட்சி.
ராஜராஜசோழனின் ஆயிரமாவது ஆண்டு பிறந்தநாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதன் வாயிலாக தமிழக மக்கள் மீது அவர் அளப்பரிய அன்பை கொண்டுள்ளார் என்பதும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ராமேஸ்வரத்தில் பிறந்து ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல் கலாமை நினைவு கூறுகிற வகையில் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் தலைவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார.
சிதம்பரம் தொகுதி எம்ப திருமாவளவன், பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டனர். இவர் திமுக கூட்டணியில் இருந்த போது ஒரு நாடாளுமன்ற இருந்து பிரதமர் மோடியை வரவேற்றது அற்புதமானது. அவர் தமிழகத்தின் மீது வைத்திருக்கும் பெருமையையும் கொடுத்துள்ளது.
அவர் தமிழகத்தின் மீது வைத்திருக்கிற பெருமையையும் புகழையும் மோடி வைத்திருக்கதிறார் என்பது சிறப்பானது என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications