“நான் ரொம்ப நாளா ஒன் சைடு லவ்லயே போயிட்டு இருக்கேன்".. பிரச்சாரத்தில் சீமான் கலகலப்பு!
சிவகங்கை: "என் காதல் புரிஞ்சிருச்சுனா நான் ஜெயிச்சிடுவேன்.. நான் ரொம்ப நாளா ஒன் சைடு லவ்லயே போயிட்டு இருக்கேன்" என சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நாதக தலைமை ஒருங்கிணாப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகியோர் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு தலைவர்களின் பிரச்சாரமும் ஒவ்வொரு ஸ்டைலில் இருந்து வருகிறது. அந்தவகையில் சீமான், பாட்டுப் பாடியும், நகைச்சுவையாகப் பேசியும் வாக்கு சேகரித்து வருகிறார். சீமான், காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார், தமிழத்தின் 234 சட்டசபை தொகுதிகளிலும் தனித்துக் களமிறங்குகிறது. நாம் தமிழர் கட்சி.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சிறிதுநேரம் கிண்டலாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய சீமான், "நான் 15 ஆண்டுகளாக காதலித்து கத்திக் கொண்டிருக்கிறேன். என் காதல் புரிந்துவிட்டால் நான் வென்றுவிடுவேன். நான் நீண்ட நாட்களாக ஒருதலை காதலாகவே சென்று கொண்டிருக்கிறேன். இந்த மக்கள் என்னை கண்டுகொள்வதில்லை.
நானும் மற்ற அரசியல் கட்சியினரைப் போலவே ஏமாற்றலாம் என யோசிக்கிறேன். ஆனால் மனம் ஒத்துக்கொள்ள மறுக்கிறது. அவர்கள் ரூ.2,000 தருகிறோம் எனக் கூறுகிறார்கள். நான் வீட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் தருகிறேன். அவர்கள் சொன்னால் நம்புகிறார்கள். நான் சொன்னால் சிரிக்கிறார்கள்.
ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் ஒரு கிலோ தங்கம், புதிதாக திருமணமான பெண்களுக்கு ஒரு கிலோ வைரமும், விரும்பிய நாட்டுக்கு தேனிலவு செல்ல ஏற்பாடும் செய்யப்படும். வேறு ஏதேனும் வேண்டுமா?" என சிரித்துக்கொண்டே பேசினார் சீமான்,
தொடர்ந்து பேசிய சீமான், "திருந்துகள். இதுபோன்ற இலவசங்களை நம்பாதீர்கள். வீட்டிற்கு இரண்டு பேருக்கு அரசு வேலை தருகிறேன். ஒரு வட இந்தியர்களும் இங்கு இருக்கமாட்டார்கள். படிப்புக்கேற்ற வேலை, திறன் மேம்பாடு என அனைத்தையும் நான் செய்வேன். மது காய்ச்சப்பட்டாது, விற்கப்படாது. அதற்கு பதில் பனம்பால், தென்னம்பால் போன்றவை விற்கப்படும்" எனக் கூறினார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications