நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை காலமானார்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சிவகங்கை: திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் இன்று வயது முதிர்வினால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரைப்பட துறையினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூர் என்ற கிராமத்தில் சீமானின் பெற்றோர்கள் செந்தமிழன், அன்னம்மாள் வசித்து வந்தனர்.
வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சீமானின் தந்தை செந்தமிழன் இன்று அரணையூரில் காலமானார். அவரது மறைவினை நாம் தமிழர் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

சீமானின் தந்தை மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூர் கிராமத்தில் மறைந்த செந்தமிழன் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்களின் மறைவுச் செய்தி வேதனை தருகிறது. அவரை இழந்து துயரத்தில் இருக்கும் சீமானுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், சீமான் அவர்களின் திரையுலகப் பயணத்திற்கும் பின்னர் அரசியல் செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்த பெரியவர் செந்தமிழன். அவரது மறைவால் வாடும் திரு.சீமான் அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னை உட்பட.. 15 மாவட்டங்களுக்கு மழை! உஷார் மக்களே.. வானிலை மையம் வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications