லியோனி, பிடிஆர்..புண்படுத்திட்டே இருங்காங்க! கொந்தளித்த பாஜக சீனியர்! இவ்வளவு கடன் வாங்கியிருக்காரா?
சிவகங்கை : தொடர்ந்து இந்து மதம் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பும் மதவெறி கொண்ட தீய சக்திகளை திமுக அரசு பொறுப்புகளில் நியமித்து திட்டமிட்டு இந்து மதத்தினை இழிவுபடுத்தி வருவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசியதாக சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி பிரமுகருமான கனல் கண்ணன் கடந்த சில நாட்களுக்கும் முன்னர் புதுச்சேரியில் பதுங்கியிருந்தபோது சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரது ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் அவர் சிறையில் இருந்து வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கனல் கண்ணனுக்கு ஆதரவாக பேசி வருகின்றன.

கனல் கண்ணன்
இந்நிலையில் கனல் கண்ணனுக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா தொடர்ந்து பேசி வருகிறார் மேலும் கனல் கண்ணனை கைது செய்த திமுக அரசு யூடியூபர் மைனர் விஜயை ஏன் கைது செய்யவில்லை எனவும் கேள்வி எழுப்பி வருகிறார். இந்நிலையில் திமுக அரசு மதவெறி கொண்ட தீய சக்திகளை அரசு பொறுப்பில் நியமித்து திட்டமிட்டு இந்து மதத்தை இழிவுபடுத்தி வருவதாக கடுமை விமர்சனத்தை முன் வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்," திராவிட முன்னேற்றக் கழகம் இந்து விரோத கட்சி மட்டுமல்ல தேச விரோத கட்சியாகவும் இருக்கிறது.

எச்.ராஜா
ஈ.வெ.ராமசாமி பற்றி பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கனனை கைது செய்ததை நான் வன்மையாக கண்டிக்கிறேன். கனல் கண்ணனை கைது செய்த தமிழக அரசு சிதம்பரம் நடராஜப் பெருமானை அவதூறாக பேசிய யூடுயூபரான மைனர் விஜயை ஏன் கைது செய்யவில்லை. தமிழ்நாடு காவல்துறை திமுக அறிவாலயத்தின் அடிமகளாக மாறிப் போயிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இரண்டு கம்பெனிகளில் திவாலாக்கி விட்டு இங்கு வந்தவர்தான் தற்போதைய நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
தற்போது தமிழகத்தை திவாலாக்க முடிவு செய்து 15 மாதங்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார். மின்துறையில் வேலை ஆட்களை காலி செய்து விட்டு மின் கணக்கிட்டு ஒப்பந்தக்காரர்களை பயன்படுத்தி முறையாக மின்கணக்கீடு செய்யாமல் பொதுமக்கள் கவலைப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மதவெறி கொண்ட தீய சக்திகளை அரசு பொறுப்பில் நியமித்து திட்டமிட்டு இந்து மதத்தை இழிவு படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

திண்டுக்கல் லியோனி
இந்து மதத்தையும் பெண்களையும் இழிவுபடுத்தி வரும் திண்டுக்கல் லியோனியை தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவராக நியமிக்க நான் அப்போது எதிர்ப்புக்கு கூறியிருந்தேன். தற்போது அவர் இந்து மதத்தை மிகவும் இழிவாக பேசி வருகிறார். லியோனியை தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் பதவியில் இருந்து தமிழக அரசு உடனடியாக நீக்க வேண்டும். இதை செய்தால் தான் தமிழக முதல்வர் ஸ்டாலினை நாகரீகமானவர் என மக்கள் கருதுவார்கள் இல்லையென்றால் முதல்வர் ஸ்டாலின் சொல்லித்தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக மக்கள் நினைப்பாளர்கள்." என எச். ராஜா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications