உண்டியல் காசை கண்டு ஆடிப்போன சிவகங்கை தம்பதி.. தகர பெட்டியை மண்ணுக்குள் தோண்டி பார்த்தால்? என்னாச்சு
சிவகங்கை: சிவகங்கையில் ஒரு வருட காலமாகவே, மண்ணுக்கு அடியில் பணத்தை சேமித்து வைத்து வந்திருக்கிறார்கள் இந்த கூலித் தொழிலாளி தம்பதியினர்.. இப்போது அந்த சேமிப்பு பணத்தை கரையான் அரித்த சம்பவம் மிகப்பெரிய சோகத்தை தம்பதிக்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மாவட்ட கலெக்டர் வரை சென்றதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்க எடுக்கப்பட்டு வருகிறது.. என்ன நடந்தது சிவகங்கையில்? யாரிந்த தம்பதி?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிளாதரி ஊராட்சி கக்கினியார்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கருப்பி.. இவருக்கு 30 வயதாகிறது.. முத்துக்கருப்பி தன்னுடைய 2 மகள்கள், ஒரு மகனுடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

கூலி வேலை செய்து தன்னுடைய குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். அதில் கிடைக்க கூடிய பணத்தை குடும்பத்தை கவனித்து கொண்டு, மிச்சமுள்ள பணத்தை தகர உண்டியலில் சிறுக சிறுக சேமித்து வந்துள்ளார்..
மண்ணுக்குள் குழி தோண்டி புதைத்து
குடிசை வீட்டில் பாதுகாப்பு இல்லாதால், பாதுகாப்பதற்காக அந்த உண்டியலை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டி புதைத்து வைத்திருந்தார்... ரூ.500 தாள்களாக ரூ.1 லட்சம் வரை சேமித்து வைத்திருந்தார் முத்துக்கருப்பி.
இந்நிலையில், குழந்தைகள் காதணி விழாவுக்காக நேற்று உண்டியலை திறந்து பார்த்தார்.. அப்போது பல 500 ரூபாய் நோட்டுகளை கரையான்கள் அரித்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.. சமீபத்தில் பெய்த மழையால் பணம் முழுவதும் நனைந்ததுடன், கரையான் அறித்து முழுவதுமாக சேதடைந்துவிட்டது.. சேமிப்பு பணம் முழுவதுமே வீணாகிவிட்டதே என்று கண்கலங்கி அழுதார்.. தங்களது வாழ்வாதாரமே இந்த பணம் தான் என்று எண்ணி வாழ்ந்து வந்த நிலையில், அத்தனையும் மோசமாகிவிட்டதே என்று கதறினார்...
கருணை அடிப்படையில் பணம்
இந்த விஷயம் மீடியாக்கள் மூலம் வெளி உலகுக்கு தெரியவந்தது.. இதற்கு பிறகுதான் அங்குள்ளவர்களுக்கே தெரியவந்துள்ளது.. இதையடுத்து, சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித், தாசில்தார் சிவராமனிடம் தெரிவித்து, முன்னோடி வங்கி மூலம் ரிசர்வ் வங்கியிடம் கருணை அடிப்படையில் பணத்தை பெற்றுத்தர முயற்சிக்க கூறினார்.
பிறகு உடனடியாக தாசில்தார் தலைமையிலான குழுவினர், அந்த தம்பதியை அழைத்து சென்று, முன்னோடி வங்கி மேலாளரை அணுகினார்கள்.. இதனையடுத்து கிழிந்த ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்றி தர வங்கிகளுக்கு அதிகாரம் இருப்பதாகவும், இதுபோன்ற பிரச்சனை குறித்து ரிசர்வ் வங்கிக்கு முறையாக கடிதம் அனுப்பி, அவர்களின் அறிவுரைபடியே செயல்பட முடியும் என்றும்; ரூபாய் நோட்டுகளை வாங்கிகொண்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் வங்கி அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
தகர பெட்டியில் ரூபாய் நோட்டு
அந்த தகர பெட்டியில் ரூ.500, 200, 50, 20 நோட்டுக்கள் அரிக்கப்பட்டிருக்கிறதாம்.. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உண்டியலில் இந்த பணத்தை சேர்த்து வைத்து வந்துள்ளனர்.. இப்போது இந்த பணம் சேதமடைந்துள்ளதால், குழந்தைகளுக்கு எப்படி காதணி விழா நடத்துவது என்று கலங்கி கூறுகிறார்கள்.
ஆனால், பேங்க் மேனேஜர் பிரவீன்குமார், அந்த சேதடைந்த நோட்டுக்களை பார்வையிட்டு ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரை செய்வதாக உறுதி தந்துள்ளார்.. அத்துடன், அழைக்கும் போது பணத்துடன் ரிசர்வ் வங்கிக்கு வர வேண்டும் என்றும் அந்த முத்துக்கருப்பியிடம் தெரிவித்திருக்கிறார். சேதமடைந்த பணத்தை மீட்டு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த் துறை அதிகாரிகளும் நம்பிக்கை தெரிவித்துள்ளதால் முத்துக்கருப்பிக்கு இழந்த பணம் பெற்றுத் தரப்படும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications