போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட அஜித் குமார்.. வீட்டிற்கு சென்ற எடப்பாடி.. தாயாரின் கையை பிடித்து ஆறுதல்
சிவகங்கை: சிவகங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த திருப்புவனம் அஜித் குமார் வீட்டிற்கு சென்ற குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது தாய் மற்றும் சகோதரர் நவீன் குமாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவரது வீட்டில் இருந்த அஜித் குமாரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து பூக்களை தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக சார்பாக ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்றும் கூறினார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித் குமார். 29 வயதான இவர் கோயிலில் தற்காலிக ஊழியராக பணியாற்றினார். இந்த நிலையில்தான், கடந்த மாதம் நகை திருட்டு வழக்கில் தனிப்படை போலீசார் இவரை அழைத்து சென்று விசாரனை நடத்தியுள்ளனர்.

போலீசார் கொடூரமாக தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியது. போலீசாரின் சட்ட விரோத கஸ்டடியில் இளைஞர் அடித்துகொல்லப்பட்ட வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஜித்குமார் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் 8 ஆம் தேதி நீதிபதியின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை மாநில காவல்துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்ற முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதன்படி, இரு வாரங்களுக்கு முன்னால் இந்த வழக்கின் விசாரணையை கையில் எடுத்த சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை திருட்டு புகார் அளித்த நிகிதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே, திருப்புவனம் அஜித் குமார் வீட்டிற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். அவரது தாய் மற்றும் சகோதரர் நவீன் குமாருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவரது வீட்டில் இருந்த அஜித் குமாரின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து பூக்களை தூவி மரியாதை செலுத்தினார்.
இதன்பிறகு அதிமுக சார்பாக ரூ.5 லட்சம் நிதி உதவி அளிப்பதாக அந்த குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அதிமுக அரசு அமைந்ததும் நவீன் குமார் விருப்பப்படும் இடத்தில் வேலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் கட்டமாக மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தான் சிவகங்கை வந்திருந்த எடப்பாடி பழனிசாமி அஜித் குமார் குடும்பத்திற்கு நேரில் சென்று சந்தித்தார்.
-
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications