சிவகங்கை ரேஷன் கடைக்குள்ளேயே பலாத்காரம் செய்த ஊழியர்! பாவம் கணவனை இழந்த அந்த பெண்! மானாமதுரை கொடுமை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற பெண்ணிடம் தகாத வார்த்தைகளில் பேசியிருக்கிறார் ரேஷன் ஊழியர்.. கடைசியில் ஆசை வார்த்தைகூ, கடைக்குள்ளேயே வைத்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. ஏற்கனவே குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும்நிலையில், பெண்களுக்கான பாதுகாப்பு மீண்டும் மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பட்டு வரும் நிலையில், குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அடுத்தடுத்து வெளியாகும் சம்பவங்கள் அந்த கேள்வியை மேலும் தீவிரமாக்கியுள்ளன.

வண்டலூர் அரசு பள்ளி
நேற்று வண்டலூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக செய்திகள் பரவியதால், பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இதுதொடர்பான ஆதாரங்கள் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், பள்ளி மாணவி விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் பள்ளி மாணவி
இதற்கிடையே தாம்பரம் அருகே இன்னொரு சம்பவமும் நேற்று நடந்தது. நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த முத்துசாமி (22), டிப்ளமோ முடித்துவிட்டு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இன்ஸ்டாகிராம் மூலம் தாம்பரம் அருகே அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியுடன் பழகியதாக கூறப்படுகிறது. கடந்த 24-ம் தேதி சிறுமியை நேரில் சந்திக்க வேண்டும் என்று தொடர்ந்து மெசேஜ் அனுப்பிய நிலையில், அவரது பேச்சை நம்பி மாணவி அவரை சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது தாம்பரம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று முத்துசாமி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பிறகு சிறுமியை வீட்டுக்கு அனுப்பியுள்ளார். வீட்டுக்கு சென்ற மாணவிக்கு உடல் ரீதியாக பாதிப்பு ஏற்பட்டு ரத்தப்போக்கு அதிகரித்ததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சிவகங்கை மானாமதுரை
இப்படி பெண்கள் மற்றும் சிறுமிகள் தொடர்பான சம்பவங்கள் அடுத்தடுத்து பேசப்பட்டு வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே நடந்த சம்பவம் இன்னொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மானாமதுரை அருகே மேலநெட்டூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வேந்திரன், இளையான்குடியை அடுத்த திருவள்ளூர் கிராமத்தில் செயல்படும் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
இதே பகுதியில், கணவனை இழந்த 30 வயது பெண் ஒருவர், தன்னுடைய 10 வயது மகனுடன் வசித்து வருகிறார்.. இந்த பெண், பொருட்கள் வாங்குவதற்காக, ரேஷன் கடைக்கு சென்றபோது, அங்கிருந்த ஊழியருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம், ரேஷன் பொருட்கள் வாங்க வந்த அந்தப் பெண்ணிடம் செல்வேந்திரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினாராம்.
பிறகு, அந்தப் பெண்ணை ரேஷன் கடைக்குள்ளேயே வைத்து செல்வேந்திரன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது.. இதையடுத்து அந்தப் பெண் கர்ப்பமாகியுள்ளார். கடந்த 17ம் தேதி மதியம் 1 மணிக்கு வீட்டில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.. 108 ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையும் அந்த பெண்ணையும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்
ரேஷன் கடைக்குள் பலாத்காரம்
ஆனால், குழந்தை பிறந்த பிறகு செல்வேந்திரன் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் சிவகங்கை அனைத்து மகளிர் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மகளிர் போலீசார் செல்வேந்திரனை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு பெண் ஏற்கனவே கணவனை இழந்த நிலையில் இருந்ததாக கூறப்படும் சூழலில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பொதுமக்கள் அன்றாடம் செல்லும் ரேஷன் கடைக்குள்ளேயே இப்படியொரு சம்பவம் நடந்ததாக வெளியாகியிருப்பது, பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது. அத்துடன் பொதுமக்கள் தினமும் வந்துசெல்லக்கூடிய ரேஷன் கடையிலேயே இப்படியொரு அத்துமீறலா? என்றும் அதிர்ச்சி கேள்வி எழுந்துள்ளது...!!


Click it and Unblock the Notifications
