Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தற்கொலை முயற்சி வீடியோ.. வாட்டர் பாட்டிலில் குடித்து கொண்டே.. மாத்திரையை விழுங்கிய பெண் ஊழியர்

சிவகங்கை அங்கன்வாடி பெண் ஊழியர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலை அடுத்துள்ள இரும்பூர் கிராமத்தில் செயல்பட்டுவருகிறது அங்கன்வாடி மையம்... இங்கு ஊழியராக வேலை பார்ப்பவர் சுதா.

Recommended Video

    வாட்டர் பாட்டிலில் குடித்து கொண்டே.. தூக்க மாத்திரையை விழுங்கிய பெண் ஊழியர் - அதிர்ச்சி வீடியோ

    காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி மையத்தை இடம் மாற்றம் குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் நல வளர்ச்சி திட்ட அலுவலர் பஞ்சவர்ணம் என்பவரிடம் பேச வந்ததாக கூறப்படுகிறது..

    கதறல்

    கதறல்

    அப்போது, பஞ்சவர்ணம் சுதாவை அவதூறாக பேசியதாகவும் அதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாக சொல்லி, சுதா தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதுடன் அதனை வீடியோ எடுத்து சோஷியல் மீடியாவிலும் போட்டுவிட்டார். அந்த வீடியோவில் சுதா அழுது கொண்டே பேசுகிறார்.. தன்னை அறிமுகம் செய்து கொண்டதுடன், தனக்கு என்ன பிரச்சனை என்பதையும் சொல்கிறார்.. பிறகு கையில் தயாராக வைத்திருந்த தூக்க மாத்திரைகள் அடங்கிய அட்டையை பிரித்து ஒவ்வொன்றாக வாயில் போட்டு அழுகிறார்.

     வீடியோ

    வீடியோ

    அந்த வீடியோவில் சுதா பேசியது இதுதான் எல்லாருக்கும் வணக்கம்.. என் பேரு சுதா.. காளையர்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாளராக வேலை செய்கிறேன்.. என்னை அவங்க என்னென்ன பாடுபடுத்தினாங்கன்னு எல்லாருக்குமே தெரியும்.. நான் நிறைய தடவை இது சம்பந்தமாக சங்கத்தில் புகார் சொல்லி இருக்கேன்.. அதுபோக கலெக்டர்கிட்டயும் இது பற்றி மனு தந்திருக்கேன்.. யாருமே எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க..

     அந்தம்மா தான் காரணம்

    அந்தம்மா தான் காரணம்

    அந்தம்மா என்னை இப்படி பாடாய் படுத்திடுச்சு.. இந்த மையத்தை இடமாற்றம் செய்ய முயற்சி செய்றேன். இந்தம்மா என்னை அலைய வெச்சிட்டே இருக்கு.. இப்போ என்னை உருட்டி மிரட்டிறாங்க.. எனக்கு வேற வழி தெரியல.. இந்தம்மா படுத்தற பாட்டுக்கு, செத்தே போய்டலாம் என்று சொல்லி, மாத்திரைகளை எடுத்து, வாயில் போட்டு, வாட்டர் பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்கிறார்..

     தற்கொலை முயற்சி

    தற்கொலை முயற்சி

    ஒவ்வொரு மாத்திரையாக போட்டு அழுது கொண்டே மறுபடியும் பேசுகிறார்.. மத்தவங்களை எல்லாம் அந்தம்மா ஒன்னும் சொல்றது இல்லை, என்னைய மட்டும் இப்படி படுத்தி எடுக்கறாங்க.. அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கல, சங்கமும் நடவடிக்கை எடுக்கல.. வேற வழி தெரியல எனக்கு.. என்கிறார்.. இந்த தற்கொலை முயற்சியின் லைவ் வீடியோதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சுதா இப்போது சீரியஸாக இருக்கிறாராம்.. தீவிர சிகிச்சையும், மறுபுறம் இது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+