ஆக்ரோஷமாக பிரச்சாரம் செய்த எச்.ராஜா.. பெரியார் வாழ்கவென்று ஆப் செய்த மக்கள்.. சிவகங்கையில் கலகல!
சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பிரச்சாரம் செய்யும் போது அங்கிருந்த மக்கள் அவரை பார்த்து ''பெரியார் வாழ்க'' என்று கோஷமிட்டு இருக்கிறார்கள்.
Recommended Video

சிவகங்கை: சிவகங்கையில் பாஜக வேட்பாளர் எச்.ராஜா பிரச்சாரம் செய்யும் போது அங்கிருந்த மக்கள் அவரை பார்த்து ''பெரியார் வாழ்க'' என்று கோஷமிட்டு இருக்கிறார்கள்.
லோக்சபா தேர்தல் காரணமாக தற்போது தமிழகத்தில் தீவிரமாக பிரச்சாரம் நடந்து வருகிறது. தமிழகம் முழுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்த நிலையில் சிவகங்கையில் அதிமுக கூட்டணி சார்பாக பாஜக வேட்பாளர் தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிடுகிறார். இவர் நேற்றில் இருந்து இங்கு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

சூப்பர் போட்டி
இந்த லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதி கொஞ்சம் வித்தியாசமான தொகுதியாகும். இங்கு போட்டியிடும் மூன்று வேட்பாளர்கள் ஸ்டார் வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக சார்பாக எச். ராஜா இங்கு போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பாக சினேகன் போட்டியிடுகிறார்.

கூடவே
இதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிற்கு உறுதுணையாக எப்போதும் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் கூடவே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எச்.ராஜா செல்லும் இடங்களுக்கு எல்லாம் விஜயபாஸ்கர் சென்று பிரச்சாரம் செய்கிறார். எச்.ராஜாவிற்காக பாஜகவினரை விட விஜயபாஸ்கர்தான் அதிகம் பிரச்சாரம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டீ குடித்தார்
நேற்று இரவு இவர்கள் பிரச்சாரம் செய்யும் போது ஒன்றாக சேர்ந்து டீ குடித்தனர். விஜயபாஸ்கர் மற்றும் எச்.ராஜா இருவரும் ஒன்றாக சேர்ந்து டீ கடையில் டீ குடித்து சில நிமிடம் அங்கேயே இருந்து பேசிக்கொண்டு இருந்தனர். அதிமுக, பாஜக தொண்டர்கள் பலரும் ஒன்றாக சேர்ந்து டீ குடித்தனர்.

பெரியார் கோஷம்
இந்த நிலையில் இன்று பொன்னமராவதியில் எச்.ராஜா பிரச்சாரம் செய்யும் போது அங்கிருந்த சிலர் பெரியார் வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள். தொடர்ந்து பெரியார் வாழ்க வாழ்க என்று கத்தினார்கள். உடனே எச்.ராஜா சில நொடிகள் தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு பின் தொடர்ந்து பேசினார். இதனால் அங்கு சில நிமிடம் சலசலப்பு ஏற்பட்டது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications