அரைநிர்வாண கோலத்தில்.. காலங்காத்தாலேயே பூத்தில் ஷாக்.. ஒரு அதிகாரி செய்யற காரியமா இது..!

சிவகங்கையில் அரைநிர்வாணத்தோடு ஒருவர் ஓட்டுப்போட வந்தார்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஒருவர் திடீரென அரைநிர்வாண கோலத்தில் ஓட்டுப்போட வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது.

இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை சரியாக 7 மணிக்கு தொடங்கியது.. வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. கடைசி ஒரு மணி நேரம் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 கேமரா

கேமரா

இன்று பதிவாகும் வாக்குகள், வரும் 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. பொதுமக்கள் தங்கள் தங்கள் வாக்குச்சாவடிகளில் ஓட்டளிக்க வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்..

 மருதுபாண்டியர்

மருதுபாண்டியர்

7 மணிக்கு ஒவ்வொருவராக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தொடங்கினர்.. இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளும் மும்முரமாகி உள்ளன.. இதுவரை அனைத்து பகுதிகளிலும் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், சிவகங்கையில் மட்டும் அங்குள்ள ஒரு பூத்தில் திடீரென பரபரப்பு ஒன்று ஏற்பட்டுவிட்டது. இங்குள்ள 12வது வார்டுகான வாக்குப்பதிவு மருதுபாண்டியர் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

 அரை நிர்வாணம்

அரை நிர்வாணம்

அப்போது, நகை மதிப்பீட்டாளரும் மாநில நகை மதிப்பீட்டாளர்கள் சங்கத்தின் தலைவருமான மகேஸ்குமார் என்பவர் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து அரை நிர்வாணமாக வாக்களிக்க வந்தார்... இன்று காலையில் இவர் வந்து நின்ற கோலத்தை பார்த்ததும், அங்கிருந்தவர்கள் கடுமையான அதிர்ச்சி அடைந்தனர்.. பிறகு அதை பற்றி விசாரித்ததற்கு, தன்னை பணி நிரந்தரம் செய்யக் கோரி அரை நிர்வாணமாக வந்ததாக காரணம் கூறினார்.. ஆனாலும், மகேஸ்குமாரை அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் வாக்கு சாவடியில் இருந்து அப்புறப்படுத்தினர்.

Recommended Video

    முன்னொரு காலத்தில் Episode01 | Chitra Ramkrishna NSE | Himalayan Yogi | Oneindia Tamil
    பரபரப்பு

    பரபரப்பு

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகேஸ்குமார், நகை மதிப்பீட்டாளராக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறேன்... வங்கியில் மனித உரிமை மீறல் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது.. நகை மதிப்பீட்டாளர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்... இதனை வலியுறுத்தியே அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டேன்" என்றார்.. அரை நிர்வாண கோலத்தில் ஓட்டுப்போட வந்த இந்த அதிகாரியால் அந்த பூத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+