காட்டுக்குள் கிடந்த.. புவனேஸ்வரி டீச்சரின் சடலம்.. ஷாக்கான காரைக்குடி.. அதிர வைக்கும் பின்னணி!
சிவகங்கை: காட்டுக்குள் புவனேஸ்வரி டீச்சரின் சடலத்தை கண்டு காரைக்குரை மக்கள் அதிர்ந்துவிட்டனர்.. இது சம்பந்தமான விசாரணையும் நடந்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் காண்டீபன்.. இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி புவனேஸ்வரி.

அரசு பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வந்தார்.. இதை தவிர, பரதநாட்டியம் என்றால் இவருக்கு சிறு வயதில் இருந்தே அளவு கடந்த விருப்பம் என்பதால், தனியாக ஒரு டான்ஸ் பள்ளியையும் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்தார்.. அதில், ''இனி நான் யாருக்கும் பாரமாக இருக்க போவதில்லை'' என்று தெரிவித்திருந்தார்.. டீச்சரின் இந்த ஸ்டேட்டஸை நடன பள்ளி மாணவி ஒருவர் பார்த்துள்ளார்.. இதையடுத்து, உடனடியாக புவனேஸ்வரியின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ந்து போன காண்டீபன் புவனேஸ்வரியின் செல்போனுக்கு உடனே தொடர்பு கொண்டார்.. ரிங் போனது, ஆனால் யாரும் எடுக்கவில்லை. இதனால் பதட்டமடைந்த காண்டீபன், உடனடியாக போலீசுக்கு புகார் சொல்லி, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பற்றியும் சொன்னார்.. இதையடுத்து போலீசார் அந்த செல்போன் நம்பரை டிராக் செய்தனர்.
காரைக்குகுடி - திருச்சி நெடுஞ்சாலையில் சிக்னல் காட்டியுள்ளது. அங்கு சென்று தேடுதல் வேட்டையில் இறங்கினர்.. ஓரிடத்தில் புவனேஸ்வரியின் ஸ்கூட்டி மட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.. அதனால் அந்த பகுதியில் வலைவீசி தேடினர்.. காட்டு பகுதியில் ஒரு மரத்தில் புவனேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார்... சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
டீச்சர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? இந்த பகுதியில் வந்து ஏன் தற்கொலை செய்து கொண்டார் என உடனடியாக தெரியவில்லை.. தம்பதி 2 பேருமே நல்ல வேலையில், அரசு வேலையில் கைநிறைய சம்பளம் வாங்கி வரும்போது, அவர்களுக்குள் ஏதாவது தகராறா? அல்லது வேறு பிரச்சனையா அல்லது டீச்சரை கொன்று யாராவது மரத்தில் தொங்கவிட்டு போனார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications