சிவகங்கை சுள்ளான் மதன் கேஸில் 13 பேரை தூக்கிய போலீஸ்.. 77 சோஷியல் மீடியா கணக்குகளுக்கு பூட்டு

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ரவுடி சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, சோஷியல் மீடியாவில் வன்முறையைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியானதால், 77 சமூக வலைதளக் கணக்குகளை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் மதன் என்கிற சுள்ளான் மதன் (26). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன.

Sivagangai Sullan Madhan Cyber Crime Police

சிவகங்கை மதன்

கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் மாதம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கரடிப்பட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் ஜெயசூர்யா, சுபாஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதன் கைது செய்யப்பட்டார். பின்னர், குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர், கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த அக்டோபர் 18-ம் தேதி சிவகங்கை அருகே மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, தனது காளையுடன் நண்பர்களோடு மதன் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், மதனை ஓட ஓட விரட்டிச் சென்று வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக சிவகங்கை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகளும் அமைக்கப்பட்டன.

13 பேர் கைது

இந்த கொடூர கொலை தொடர்பாக, சம்பவம் நடந்த 12 மணி நேரத்துக்குள் பிரதீப், பாலமுருகன், பாபு ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சந்தோஷ், ஜெயமாணிக்கராஜ், முத்துசூர்யா, விக்னேஷ், மிதுன் மாணிக்கம், அஜித்குமார், சந்துரு உள்ளிட்ட மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக, திருப்புவனம் அருகே மாரநாட்டைச் சேர்ந்த அதிபதி ராஜா (26), காரைக்குடியைச் சேர்ந்த மணிகண்டன் (25), விருதுநகர் மாவட்டம் அரசகுளத்தைச் சேர்ந்த விஜய் (19) ஆகிய 3 பேரையும் போலீசார் அக்டோபர் 25-ம் தேதி கைது செய்தனர். இதன் மூலம் மதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

77 கணக்குகள் முடக்கம்

மதன் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சோஷியல் மீடியாவில் 2 தரப்பினரையும் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் மிரட்டல் விடுக்கும் வகையிலும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பதிவுகளை வெளியிட்டனர். இதையடுத்து, இந்த பதிவுகளையெல்லாம் கண்காணித்த சைபர் கிரைம் போலீசார், இதுவரை 24 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். மேலும், 74 இன்ஸ்டாகிராம் கணக்குகள், 3 பேஸ்புக் கணக்குகள் என மொத்தம் 77 சமூக வலைதள கணக்குகளை முடக்கியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பதிவுகளை வெளியிடுவோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிவகங்கை போலீசார் எச்சரித்துள்ளனர்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+