இன்று பிற்பகல் முதல் நாளை வரை டாஸ்மாக் கடைகள் இயங்காது! சிவகங்கை கலெக்டர் வெளியிட்ட அறிவிப்பு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் மருது சகோதரர்களின் 224வது நினைவு தினத்தை முன்னிட்டு, அமைதியைப் பேணும் வகையில், இன்று பிற்பகல் முதல் நாளை முழுவதும் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் கிளப்புகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியர் பொற்கொடி அறிவித்துள்ளார்.
திருப்பத்தூரில் நாளை மருது சகோதரர்களின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. மருது சகோதரர்களின் 224வது நினைவு தினத்தை முன்னிட்டு, அமைதியைப் பேணும் வகையில், குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் FL2 கிளப்புகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கா. பொற்கொடி அறிவித்துள்ளார்.

மூடும் நாட்கள் மற்றும் நேரம்:
2025 அக்டோபர் 23 ஆம் தேதி (இன்று) பிற்பகல் முதல், 2025 அக்டோபர் 24ஆம் தேதி முழுவதும் இந்தக் கடைகள் மற்றும் கிளப்புகள் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மூடப்படும் முக்கியப் பகுதிகளின் விவரம்:
1. திருப்பத்தூர் பகுதி:
FL2 கிளப்: கேசினோ ராயல் ரெக்கிரியேஷன் கிளப்.
டாஸ்மாக் கடைகள்: 7571 (காரைக்குடி ரோடு), 7740 (மின்நகர் - சிவகங்கை ரோடு).
2. சிவகங்கை பகுதி:
FL2 கிளப்: 7 ஸ்டார் ரெக்கிரியேஷன் கிளப், கிங்ஸ் ரெக்கிரியேஷன் கிளப்.
டாஸ்மாக் கடைகள்: 7552 (திருவள்ளுவர் தெரு), 7556 (பிள்ளைவயல் காளியம்மன் தெரு), 7414 (இரயில்வே ஸ்டேஷன்), 7577 (ராகினிபட்டி), 7514 (அஜீஸ் தெரு).
3. மானாமதுரை பகுதி:
FL2 கிளப்: ரோஜா ரெக்கிரியேஷன் கிளப்.
டாஸ்மாக் கடைகள்: 7541 (மானாமதுரை நகர்), 7544 (மானாமதுரை இரயில்வே ஸ்டேஷன்), 7663 (கீழமேல்குடி), 7706 (வளநாடு விலக்கு - இராமேஸ்வரம் நெடுஞ்சாலை) உட்பட 6 கடைகள்.
4. திருப்புவனம் பகுதி:
FL2 கிளப்: வைகை ஸ்போர்ட்ஸ் கிளப், ஸ்டால் ரெக்கிரியேஷன் கிளப்.
டாஸ்மாக் கடைகள்: 7685 (நெல்முடிகரை), 7682 (புலியூர்), 7547 (வன்னிக்கோட்டை கிராமம்), 7675 (கலியாந்தூர்) உட்பட 4 கடைகள்.
இது தவிர, திருக்கோஷ்டியூர் (2 கடைகள்), மதகுபட்டி (2 கடைகள்), திருப்பாச்சேத்தி (1 கடை), பூவந்தி (1 கடை) ஆகிய பகுதிகளிலும் உள்ள குறிப்பிடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.
மாவட்டம் முழுவதும் மருது சகோதரர்கள் நினைவு தினம் அமைதியான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications