இளநீர் பறிக்க தென்னை மரம் ஏறியவர்.. பதநீர் இறக்க பனை மரம் ஏறியவர்.. அடுத்தடுத்து இப்படி நடக்குமா?
சிவகங்கை: தமிழகத்தின் நேற்றைய தினம் ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் பனை மற்றும் தென்னை மரங்களில் ஏறியபோது எதிர்பாராதவிதமாகத் தவறி விழுந்து, தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்தந்த மாவட்டங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... இதுகுறித்து முக்கிய கோரிக்கை ஒன்று அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ளது..
சிவகங்கை மாவட்டம் சிக்கல் அருகே உள்ள மேலக்கிடாரத்தைச் சேர்ந்தவர் பனைத் தொழிலாளி ராஜேந்திரன் (64). இவர் அந்த பகுதியில் உள்ள பனை மரங்களில் ஏறி, கருப்பட்டி காய்ச்சுவதற்காக பதநீர் இறக்கும் தொழிலை செய்து வந்தார்.

பனை மரம் தொழிலாளி
அப்படித்தான் நேற்று காலையும் வழக்கம்போல சுமார் 30 அடி உயரமுள்ள பனை மரத்தில் ஏறி, உச்சியில் பதநீர் இறக்கினார். பிறகு பதநீருடன் கீழே இறங்கி வரும்போது, எதிர்பாராத விதமாக கை நழுவியதால் நிலைதடுமாறி மரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடி துடித்து உயிரிழந்தார்.
உயிரிழந்த ராஜேந்திரனுக்கு மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பனைத் தொழிலை நம்பி வாழ்ந்த குடும்பத்தின் மூலாதாரமாகத் திகழ்ந்தவர் உயிரிழந்ததால், அந்தக் குடும்பம் நிர்க்கதியாகியுள்ளது. எனவே, உயிரிழந்த ராஜேந்திரனின் குடும்பத்திற்கு அரசு உரிய நிதியுதவி வழங்கி உதவ வேண்டும் என, குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது..
தென்னை மரம்
இதேபோன்று மற்றொரு துயரச் சம்பவம் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்றுள்ளது. கூடுவாஞ்சேரி வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை.. இவருக்கு 63 வயதாகிறது.. இவர் நேற்று மதியம் தனது வீட்டின் பின்புறம் இருந்த தென்னை மரத்தில் இளநீர் பறிப்பதற்காக, வீட்டின் இரண்டாவது மாடிக்குச் சென்றுள்ளார். பிறகு ஒரு நீண்ட கம்பின் உதவியுடன் தென்னை மரத்தில் ஏறி இளநீரை பறிக்க முயன்றுள்ளார்.
அப்போது பிடிமானம் தவறி, எதிர்பாராத விதமாக செல்லத்துரை மரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு மார்பு, கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன..
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, செல்லத்துரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாதுகாப்பு - வழிமுறைகள் அவசியம்
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து சென்று செல்லத்துரையின் உடலைக் கைப்பற்றினர். பின்னர் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரம் ஏறும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள், இத்தகைய ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும்போது உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.. எனினும் பனை தொழிலாளர்களின் பாதுகாப்புக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.. இது போன்ற விபத்துகள் மீண்டும் நடக்காமல் இருக்க, சரியான பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக அவசியம் என்பதையும் இங்கு நாம் வலியுறுத்த வேண்டி உள்ளது...!!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications