"ராட்சசன்".. சாருக்கு ஹாபியே இதானாம்.. பகலில் ஓர் இரவு.. பெட்ரூமில் நுழைந்த போலீஸ்.. ஆடிப்போயிட்டாங்க

திருட வந்த இடத்தில் தண்ணி அடித்துவிட்டு, பிரியாணியும் சாப்பிட்டு தூங்கிவிட்டார் இளைஞர் ஒருவர்

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் செய்த காரியம், இணையத்தில் வீடியோவாக ஷேர் ஆகி வருகிறது.. இதை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டதுடன், அந்த இளைஞரை சரமாரியாக திட்டி தீர்த்து வருகிறார்கள். என்ன காரணம்?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது நடுவிக்கோட்டை என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் வெங்கடேசன்.. இவர் நேற்று காலை வெளியூர் சென்றுவிட்டார்.

வேலை நிமிர்த்தமாக, தன்னுடைய வீட்டை பூட்டிவிட்டு சென்றிருக்கிறார்.. ஆனால், மதிய நேரத்தில் பூட்டியிருந்த வெங்கடேசன் வீட்டின் மேற்கூரைகள் பிரிக்கப்பட்டு கிடந்தன.

கூரையை பிரிச்சாச்சு

கூரையை பிரிச்சாச்சு

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. வெளியே வீடு பூட்டியிருக்கும்போது, மேற்கூரையை யார் பிரித்திருப்பார்கள்? என்று சந்தேகம் அடைந்து, உடனடியாக வெங்கடேசனுக்கு தகவல் சொன்னார்கள்.. ஆனால், அவர் வெளியூர் சென்றிருந்ததால், போலீசுக்கும் தகவல் தந்துள்ளனர்.. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வெங்கடேசனின் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர்.. அப்போது, வீட்டின் ஹாலில் சில பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.. கிச்சனில் பாத்திரங்கள் உருண்டு கிடந்தன.. அங்கேயே ஒரு ஓரத்தில் ஃபேன்கள் கழட்டி வைக்கப்பட்டிருந்தன.

பெட்ரூமுக்குள் களவாணி

பெட்ரூமுக்குள் களவாணி

ஒரு பெரிய மூட்டை கட்டப்பட்டு, சுவற்றோரம் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.. அதில், விலை உயர்ந்த பொருட்கள் திணித்து வைக்கப்பட்டு கிடந்தன.. இதனால், ஹால், கிச்சனுக்குள்ளேயே இவைகளை பார்த்த போலீசார், வீடு முழுவதும் சோதனையிட முயன்றனர்.. அப்போதுதான் பெட்ரூமுக்குள் நுழைந்தனர்.. அங்கே படுக்கையில் ஒரு இளைஞர் குறட்டை விட்டபடி நன்றாக தூங்கி கொண்டிருந்தார்... படுக்கைக்கு பக்கத்திலேயே மது பாட்டில்கள் கிடந்தன.. கோழி பிரியாணி சாப்பிட்ட பொட்டலங்களும் விழுந்து கிடந்தன. போலீசார் அந்த இளைஞரை தட்டி எழுப்பினார்கள்..

கொள்ளை

கொள்ளை

தூக்கத்தில் இருந்து முழித்து கொண்ட அந்த இளைஞர், தன் கண்முன்னே போலீசார் நிற்பதை பார்த்து திருதிருவென முழித்தார். அவர் யார்? என்ன என்று போலீசார் அவரிடம் விசாரணையை ஆரம்பித்தனர்.. அந்த நபர் பெயர் சுதந்திரதிருநாதன்.. ராமநாதபுரம் மாவட்டம் வெட்டுக்குளம் அருகே உள்ள மேலசேத்தன்ஏந்தல் கிராமத்தை சேர்ந்தவராம்.. 27 வயதாகிறது.. இவருக்கு திருடுவதுதான் தொழிலாம்.. பூட்டி இருக்கும் வீடுகளை முதலில் நோட்டமிட்டு கொள்வாராம்.. அதற்கு பிறகு, அந்த வீட்டிற்குள் கொள்ளையடித்து செல்வது முழுநேர பணியாக இருந்து வந்துள்ளது..

மூட்டை கட்டியாச்சு

மூட்டை கட்டியாச்சு

அப்படித்தான், வெங்கடேசன் வீடு பூட்டியிருப்பதை பார்த்துள்ளார்.. வெயில் அதிகமாக இருந்ததால், கொள்ளையடித்துவிட்டு, வீட்டிற்குள் கொஞ்ச நேரம் தங்கி சாப்பிட்டு போகலாம் என்று நினைத்துள்ளார்.. அதற்காக மதியம் சாப்பிடுவதற்காக பிரியாணி, மற்றும் மதுபாட்டில் வாங்கி கொண்டு, வெங்கடேசனுடன் வீட்டிற்குள் சுவர் ஏறி குதித்துள்ளார்.. வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் ஒவ்வொன்றாக தனித்தனியாக மூட்டை கட்டி வைத்துள்ளார்.. ஆனால், அதற்குள் பசி வந்துள்ளது..

கண்ணயர்ந்தார்

கண்ணயர்ந்தார்

அதனால், மூட்டை கட்டிய பொருட்களை எல்லாம் ஒரு ஓரமாக வைத்துள்ளார்.. தண்ணி அடித்துவிட்டு, பிரியாணியும் சாப்பிட்டுள்ளார்.. இரண்டையும் சாப்பிட்டவுடன் போதை அதிகமாகி உள்ளது.. தலையும் லேசாக சுற்றியுள்ளது.. அதனால் கொஞ்ச நேரம் கண்ணயர்ந்து விட்டு போகலாம் என்று பெட்ரூமுக்குள் நுழைந்துள்ளார்.. படுத்ததுமே அசதியில் தூங்கிவிட்டாராம்.. போலீசாரிடம் இதை வாக்குமூலமாக சுதந்திர திருநாதன் சொல்லி உள்ளார்.. இதைக் கேட்ட போலீசாரும், "சரி, வா ராஜா.. ஜெயிலில் போயி ஃப்ரீயா தூங்கலாம்" என்று சொல்லி அழைத்து சென்றிருக்கிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+