காரைக்குடியில் விஜய் பரப்புரை செய்ய.. 37 நிபந்தனைகள்! லிஸ்ட் போட்ட தேர்தல் ஆணையம்!
சிவகங்கை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடர்ந்து, தனது தேர்தல் பரப்புரைகளை ரத்து செய்து வருகிறார். இந்நிலையில், நாளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும், தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் இதற்காக 37 நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது.
இதற்கு முன்னர் சென்னை வில்லிவாக்கம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்ய விஜய்க்கு இதுபோன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால், நிபந்தனைகள் காரணமாக பரப்புரையை அவர் ரத்து செய்திருந்தார். இந்நிலையில், நாளை திட்டமிட்டபடி காரைக்குடியில் பிரச்சாரம் நடக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.

விஜய்யும் தேர்தல் பரப்புரையும்
சுட்டுப்போட்டாலும் சில விஷயங்களுக்கு செட் ஆகாது. அதுபோலத்தான் விஜய்யும்-தேர்தல் பிரச்சாரங்களும் இருப்பதாக அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இவர் பிரச்சாரத்திற்கு போகும் இடங்களில், இவரை பின்தொடரும் ரசிகர்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இது அவர் மீதான விமர்சனங்களை கூர்மைப்படுத்தியிருக்கிறது. அதேநேரம், விஜய்க்கு விதிக்கப்படும் நிபந்தனைகளும் 'டைட்' செய்யப்படுகின்றன. இதன் காரணமாக, விஜய் தனது பரப்புரையை தொடர்ந்து கேன்சல் செய்து வருகிறார்.
அந்த வகையில் நாளை காரைக்குடியில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேர்தல் ஆணையம் 37 நிபந்தனைகளை விதித்திருக்கிறது.
நிபந்தனைகள் என்ன?
- விஜய் பிரச்சாரததில் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் இருக்க கூடாது
- விஜய் பிரச்சாரம் செய்யும்போது, 20 டாக்டர்கள் 200 தன்னார்வலர்கள் இருக்க வேண்டும். இவர்கள் அனைவரிடமும் வாக்கி டாக்கி இருக்க வேண்டும்.
- இலவச பொருட்கள் எதையும் கொடுக்க கூடாது
- அனுமதியளித்த நேரத்திற்குள் பிரச்சாரம் செய்ய வேண்டும்
- போக்குவரத்துக்கு இடையூறு செய்யக்கூடாது
- கண்ணதாசன் மணிமண்டபம், மாநகராட்சி நூலகம் ஆகிய கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படக்கூடாது
- மின்வாரிய ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள் கட்டாயம் இருக்க வேண்டும்
இப்படியாக மொத்தம் 37 நிபந்தனைகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது. நிபந்தனைகளை ஏற்று விஜய் பிரச்சாரம் செய்வாரா? அல்லது வழக்கம்போல கேன்சல் செய்துவிடுவரா? என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன.
-
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா? -
விஜயபாஸ்கரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை.. தவெகவில் கிளம்பிய புகைச்சல்.. ஆட்டத்தை மாற்றிய டெல்லி -
“இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்”.. நிதி அமைச்சர் மரிய வில்சன் உறுதி! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications