எப்படிங்க தப்பா பேசலாம்.. என் புருஷன் மீடியாவுல வந்து மன்னிப்பு கேட்கணும்.. டிக்டாக் வினிதா அதிரடி
தோழியிடம் தன் கணவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என இளம்பெண் தெரிவித்துள்ளார்
Recommended Video
காரைக்குடி: "ஒரு பொண்ணு பத்தி எப்படி தப்பா பேசலாம்.. என் புருஷன், என் அம்மா ரெண்டு பேரும் மீடியாவுல வந்து ஸாரி கேட்கணும்" என்று டிக்டாக் தோழிக்காக அடுத்தடுத்து வீடியோ போட்டு ஆவேசத்தை வெளிப்படுத்தி வருகிறார் வினிதா!
தேவகோட்டையைச் சேர்ந்தவர் வினிதா. இவருக்கும் ஆரோக்கிய லியோவுக்கும் போன ஜனவரி மாதம் கல்யாணம் நடந்தது. சிவகங்கையில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், ஆரோக்கிய லியோ சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.
பொழுதை கழிக்க நினைத்த வினிதா டிக்டாக் ஆப்பில் நுழையவும், திருவாரூரை சேர்ந்த அபியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அபியின் பெயரை தன் கையில் பச்சை குத்தும் அளவுக்கு இரு தோழிகளும் நெருக்கமாகி உள்ளனர்.

மாற்றம்
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி, லியோ வெளிநாட்டில் இருந்து வந்துள்ளார். மனைவியின் நடவடிக்கையில் நிறைய மாற்றம் தெரிந்ததாகவும், இதனால் வினிதாவின் செல்போனை எடுத்து பார்த்தபோதுதான் அபியுடன் "நெருக்கமான" போட்டோக்களை கண்டு கணவர் அதிர்ந்ததாகவும் சொல்லப்பட்டது.

புகார்
உடனே மனைவியை மாமியார் வீட்டில் கொண்டு போய்விட்டு, இனி அபியுடன் சேரக்கூடாது என்று எச்சரித்தும், வினிதா வீட்டில் இருந்த 40 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு அபியுடன் ஓடிவிட்டதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்தது. வினிதாவின் குடும்பத்தினரே இப்படி ஒரு குற்றச்சாட்டை சொல்லி, போலீசில் புகார் அளித்து, அபியும், வினோதினியும் சேர்ந்து செய்த டிக்டாக் வீடியோவையும் ஒப்படைத்தனர். இந்த புகாரின் பேரில் அபியையும், வினிதாவையும் தேடும் முயற்சியில் போலீசார் இறங்கினார்.

தஞ்சம்
இதனிடையே, அபியுடன் ஓடிப்போனதாக சொல்லப்பட்ட வினிதா சிவகங்கை ஸ்டேஷனில் நேற்று மாலை திடீரென தஞ்சம் அடைந்தார். முன்னதாக, இவர் ஒரு வீடியோவும் வெளியிட்டிருந்தார். அதில், "எங்களுக்குள்ள எதுக்காக பிரச்சனைன்னா, அவரு சிங்கப்பூரில் இருந்தாரு. ஒருநாள் திடீர்னு வந்துட்டாரு. என்கிட்ட சொல்லாம ஏன் வந்தீங்க, பாஸ்போர்ட் இல்லாம எப்படி வந்தீங்கன்னு கேட்டேன். என்னை அடிச்சு கஷ்டப்படுத்தினாரு. இங்க பாருங்க.. கால், கண்ணுல காயம் வந்திருக்கு. அபி என் டிக்டாக் ஃபிரண்டு. வேற ஒன்னுமே கிடையாது" என்றார்.

மனக்குமுறல்
இதையடுத்து திரும்பவும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளதுடன், செய்தியாளர்களிடம் வினிதா தன் ஆதங்கத்தையும் மனக்குமுறலையும் வெளிப்படுத்தி உள்ளார். அந்த வீடியோவில் தனது கணவனை சரமாரியாக திட்டி பேசியுள்ளார் வினிதா. "திரும்ப திரும்ப சொல்றேன்.. அந்த பொண்ணுக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.. சரியா.. நீயாதான் வந்தே.. என்னை அடிச்சே.. அதனாலதான் வீட்டை விட்டு வெளியே வந்தேன். நீ என்னை சந்தேகப்பட்டு பேசினே... என் நகைகளை நீதான் அடகு வச்சே.

சேதாரம்
என்னை அடிச்சி கொடுமைப்படுத்தினே.. இது அந்த ஹவுஸ் ஓனருக்கே தெரியும். கொடுமைப்படுத்தினாலதான் நான் வெளியே வந்துட்டேன். அந்த பொண்ணு எனக்கு டிக் டாக் ஃபிரண்டு. பார்த்திருக்கேன்.. பேசியிருக்கேன்.. அவ்வளவுதான்.. வேற சம்பந்தம் இல்லை. அவளோட நான் போகல. நான் தனியாதான் இருக்கேன். அவ உயிருக்கு சேதாரம்ன்னா அதுக்கு நீ மட்டும்தான் காரணம், அப்பதான் நான் வீட்டுக்கு வருவேன்" என்றார்.

ஸாரி கேளுங்க
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வினிதா, கணவனுக்கும் தன்னுடைய அம்மாவுக்கும் தந்துள்ளார். அப்போது, "என்கிட்ட 48 சவரன் நகையே இல்லை. என் நகையை பூராவும் அவங்க வாங்கி அடகு வச்சிட்டாங்க. அதை வச்சிதான் வெளிநாட்டுக்கு போனார். திடீர்னு சிங்கப்பூர்ல இருந்து வந்து என்னை அடிச்சிட்டாரு. அந்த பொண்ணுகிட்ட நான் போகல. அந்த பொண்ணுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும், இவர் மட்டும்தான் காரணம். அந்த பொண்ணை பத்தி வெளியே தப்பா சொல்லிட்டாரு. இப்படி தப்பா சொன்னது, என் வீட்டுக்காரரும், என் அம்மாவும். வந்து மீடியாவில ஸாரி கேட்கணும். மன்னிப்பு கேட்டே ஆகணும்" என்றார்.

அபி கண்ணீர்
இதனிடையே, சம்பந்தப்பட்ட அபி கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "எனக்கு வீட்டில் கல்யாண ஏற்பாடு செய்ய போறாங்க. அதனால வினிதாவுடனான நட்பை நான் துண்டித்து கொண்டேன்" என்று சொல்லி, "இது தான் நான்" என்று தலைப்பிட்டு டிக் டாக் பதிவு ஒன்றையும் பதிவிட்டு, தனது நிலைமையை தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications