கஷ்டப்பட்டது நானு! 108 ஆம்புலன்ஸுக்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுறாங்க.. கண் கலங்கி பேசிய அன்புமணி
சிவகாசி: 108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்கலங்கியபடி பேசினார்.
இதுகுறித்து சிவகாசியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: நான் எம்பியாகவும் மத்திய அமைச்சராகவும் டெல்லிக்கு சென்றேன். அப்போது என்னை மிகவும் வித்தியாசமாக பார்த்தார்கள். நான் கையில் எடுத்த விஷயம்தான் rural health care. இதை வைத்து இந்த பையன் (அன்புமணி) என்னதான் செய்ய போகிறான் என்றுதான் பார்த்தார்கள்.

அந்த துறையை பற்றி தெரிந்து கொள்ளவே எனக்கு 3 மாதங்கள் ஆனது. நாடாளுமன்றத்தில் கேள்வி நேரங்களின் போது இரவு முழுக்க நான் தயார் செய்வேன், காலையில் 5 மணிக்குத்தான் நான் தூங்கவே செல்வேன். பிளஸ் 2 தேர்வுக்கு கூட நான் இப்படி தயார் செய்ததில்லை. அந்த தேர்வுக்கெல்லாம் 12 , 1 மணிக்கெல்லாம் தூங்கிடுவேன்.
இன்று 108 ஆம்புலன்ஸுக்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள். அந்த திட்டம் தொடங்கி வைத்து பிறகு 2 ஆண்டுகள் கடுமையான வேலை. சென்னைக்கும் நான் வரமாட்டேன். எனக்கு அரசியல் செய்யணும், 108 ஆம்புலன்ஸ் கொண்டு வந்ததை விளம்பரப்படுத்த வேண்டும் என எனக்கு தெரியவில்லை.
108 ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வந்த போது ஒரு அதிகாரியாகத்தான் நான் வேலை செய்தேன். அரசியல்வாதியாக நான் செய்யவில்லை. உலகில் அதிக சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியாவுக்கு இடம் உண்டு. இந்தியாவில் தமிழகத்தில்தான் அதிக சாலை விபத்துகள் நடக்கின்றன.
தமிழகத்தில் அதிக சாலை விபத்துகள் நடக்கும் நகரம் சென்னை. இந்த விபத்துகளுக்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் என்னை பொருத்தமட்டில் முக்கிய காரணம் டாஸ்மாக். இது அரசின் தொழிலாக மாறிவிட்டது. மதுவே இருக்கக் கூடாது என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் மது இல்லாமல் இருக்க முடியாது எனும் நிலைக்கு இளைஞர்கள் வந்துவிட்டார்கள் என்றார் அன்புமணி.
இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு கடைகளில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆய்வு நடத்த போவதில்லை. பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தின ஊதியம் 500 ரூபாய் கொடுக்க வேண்டும். பட்டாசு விபத்துகளை தடுக்க ஊழல் செய்யாத அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். முதல்வர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இல்லை என கூறுவது தவறு. உச்சநீதிமன்றம் 2012 இல் சாதசி வாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில சுயாட்சி கூறும் திமுக ஏன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குகிறது.
இனி சமூகநீதி பற்றி திமுக பேசவே கூடாது. நீட் குறித்து ஆட்சித்து வந்சு ஒரு வாரத்தில் ரத்து செய்வோம் என கூறினார்கள். தற்போது இரண்டரை ஆண்டுகளுக்கு பின்பு கையெழுத்து இயக்கம் திமுக நடத்துகிறது. நீட் தேர்வால் எந்த பயனும் இல்லை. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம். ஆளுநர் என்பவர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். அரசை வேண்டுமென்றே எதிர்த்து செயல்படக் கூடாது. இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications