10 உயிரு போச்சே.. கதறி துடிக்கும் குடும்பத்தினர்.. சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் தொடரும் உயிரிழப்பு
விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதனால், விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சின்னகாமன்பட்டியில் கோகுலேஸ் ஃபயர் வொர்க்ஸ் என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த தொழிலாளர்கள் 5 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவல்பட்டி லிங்கசாமி என்ற 45 வயது மதிக்கத்தக்க நபர் புதன்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆக அதிகரித்திருந்தது.
சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முருகலட்சுமி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மணிகண்டன் என்பவர் விருதுநகர் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கா அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அழகுராஜ், கருப்பசாமி ஆகிய இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அழகு ராஜா சிகிச்சை பலனின்றி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெடிவிபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 10 ஆக உயா்ந்துள்ளது. 3 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications