முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஸ்டாலின் திட்டலாம்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஏன் இப்படி சொன்னாரு?
சிவகாசி:முதல்வர் பழனிசாமியை குற்றம் சாட்டும் தகுதி ஸ்டாலினுக்கு இருக்கிறது.. ஆனால் டிடிவி தினகரனுக்கு இல்லை என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சிவகாசியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:எடப்பாடி பழனிசாமி 1989-ல் சேவல் சின்னம் சார்பில் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனவர்.
அவர் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி. முதல்வரைக் குற்றம் சாட்டும் தகுதி டிடிவி தினகரனுக்கு இல்லை. 1989ம் ஆண்டு தினகரன் எங்கு இருந்தார்?

எங்கே இருந்தார் டிடிவி?
என்ன செய்துகொண்டிருந்தார்? எந்தக் கட்சியில் இருந்தார், அப்போது அவரின் பொருளாதார நிலை என்ன, இப்போது அவரின் பொருளாதார நிலை என்ன?

ஸ்டாலின் தகுதி
எடப்பாடி பழனிசாமியை குற்றம் சாட்டும் தகுதி ஸ்டாலினுக்கு உள்ளது. ஏன் என்றால் 1989ம் ஆண்டில் ஸ்டாலின் எம்எல்ஏ.

ஆரோக்கியமான அரசியல்
அதேபோல் ஸ்டாலினைக் குற்றம் சாட்டும் தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. இருவருக்குள்ளும் ஆரோக்கியமான அரசியல் போட்டி நிலவுகிறது.

டிடிவி தினகரன் வருகிறார்
இவர்களுக்கு இடையில் நான்தான் நான்தான் என்று டிடிவி தினகரன் வருகிறார். அவருக்கு இதில் சம்பந்தமில்லை. அப்புறம் ஏன் சம்பந்தமில்லாமல் வருகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications